தேவார விவகாரத்தில் போராட்டத் தீ கிளம்பிய சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடுத்தகுபீர்! கோயிலுக் குள்ளேயே, தில்லை கோவிந்தராஜ பெருமா ளுக்கும் தனி கோயில் உள்ளது. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவிந்தராஜபெருமாள் திருக்கோயில் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடலூர் திருவந்தி புரம் கோயில் நிர்வாக அலுவலரே இந்தக் கோயிலையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த ஆண்டு கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோயிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் ரங்காச்சாரி உள்ளிட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பிரம்மோற்சவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு மனு கொடுத்துள்ளார்கள்.
கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தை எதிர்க் கும் தீட்சிதர்கள் சிலரை சந்தித்தோம். வைத்திநாதசாமி தீட்சிதர் என்பவர் நம்மிடம், ''இது சிவ ஸ்தலம். அந்தக் காலத்தில் சிவ - வைணவ மதங்களுக்கிடையே மாச்சர் யம் இருக்கக்கூடாது என்பதால் சிவன் கோயில் வளாகத்திலேயே பெரு மாளுக்கும் தனி சன்னதி வைத்தார்கள். அவை பரிவார தெய்வங்கள் என்று அழைக்கப்படுமே தவிர, தனி கோயிலாக பார்க்கப்படாது. மற்றபடி, உற்சவங்கள் எல்லாமே சிவனுக்குத்தான். இங்கும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது. அதேசமயம், பெருமாளுக்கு நித்ய கால பூஜைகள் குறைவில்லாமல் நடத்தப்படுகின்றன. இதுவரை அந்த சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்தப் பட்டதாக சரித்திரம் இல்லை. இப்போது எதற்காக புதிதாக இப்படி செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி'' என்றார்.
சாமமூர்த்தி தீட்சிதர் என்பவர், ''இங்கே அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கும் சிவ-வைணவ பூஜைகளுக்கு சிலர் பங்கம் செய்யப்பார்க்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்புகூட இப்படி பிரச்னை கிளப்பினார்கள். அப்போது இங்கே வந்து ஆராய்ந்த நீதிபதி, 'இங்குள்ள பெருமாள் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றத் தேவையான வளையம்கூட இல்லை. அதனால் இங்கே கொடியேற்றும் மரபு இல்லை என்றே முடிவுக்கு வரவேண்டியுள் ளது' என்று தீர்ப்பளித்தார். அது மட்டு மில்லை... ஒரு கோயிலில் இரண்டு பிரம் மோற்சவம் நடத்தலாமா? இதுவரை காலம் காலமாக நடைபெற்றுவந்திருக்கும் சம்பிர தாயங்களை திடீரென்று மாற்றலாமா? இதைத்தான் நாங்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.
இதுபற்றி, கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் அறங்காவலர் டாக்டர் ரங்காச் சாரியிடம் கேட்டோம்.
''ஆழ்வாரால் பாடப்பெற்ற புனித வைணவ ஸ்தலம் இது. கோவிந்தராஜ பெருமாளுக்கு இப்போது பக்தர்கள் பிரம்மோற்சவம் நடத்தவேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காகத்தான் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். மற்ற பூஜைகளுக்கு இடையூறு வராத வண்ணம் எப்படி நடத்தலாம் என்றுதான் அறநிலையத்துறை தீட்சிதர்களிடம் கேட்டிருக்கிறது. இங்கே நடராஜர் ஆலயத்தில் அம்மன், முருகன் கோயில்கள் தனியே இருக்கின்றன. அங்கெல்லாம் கொடியேற்றப்பட்டு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், பெருமாளுக்கும் நடத்தலாம் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள். இப்போது விஷயம் அறநிலையத்துறையின் கையில் இருக்கிறது'' என்றார்.
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான வி.வி.சாமிநாதனும் இந்த விவகாரத்தில் பிரம்மோற்சவம் நடத்தியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதற்காக ஆதரவு திரட்டுவது, அறிக்கை, சட்ட உதவி என்று தீவிரமாக இருக்கும் அவரை சந்தித்தோம்.
''அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தை தடுக்க தீட்சிதர்கள் யார்? தேவாரம் பாடும் பிரச்னையில் அரசு தலையிட்டது போல இதிலும் தலையிட்டு பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவேண்டும். அதற்காக ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டும். பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்ச வேண்டும்'' என்று கோபத்தைக் கொட்டினார்.
அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் கடந்த 22-ம் தேதி கோயிலுக்கு வந்த அதிகாரிகள் குழுவினர், இரண்டு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர் களிடம் இதுபற்றிக் கேட்டதற்கு,
''பேச்சுவார்த்தை விவரங் களை ஆணையருக்கு அனுப்பிவிட்டோம். அவர்தான் இறுதி முடிவு எடுப்பார்'' என்றார்கள்.
எது எப்படியோ... சமீபகாலமாகவே ஆன்மிக விவகாரங்களில் புதுசு புதுசாக பூசல்களை உருவாக்கி, மோதல் உருவாக்கி, முட்டவிட்டுக் குளிர்காயும் வேலையில் சில சக்திகள் இறங்கியிருப்பதாக சிதம்பரம் வட்டாரத்தில் ஒரு பொதுவான வருத்தம் நிலவுகிறது!
- நன்றி ஜூனியர் விகடன்.
சைவம் வைணவம் பிரச்சனையே கிடையாது, என்று பூனைக்குட்டியை இல்லை யானையை சோற்றுக்குள் மறைக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள் 'இந்துத்வாக்கள்'(இராம. கோபாலன் போன்றோர்) சிலர். என்னவோ கமலஹாசன் தான் வரலாற்றிலோ இல்லை தற்சமயங்களிலோ இல்லாத ஒன்றைப் பற்றி படமெடுப்பதாகப் படம் காண்பித்தும் வருகிறார்கள்.
பூனைக்குட்டியே வெளியில் வரும் காலத்தில் யானைகள் எம்மாத்திரம்.
- இணையக் கூத்தாடி
இந்துத்வா சைவம் வைணவம் பிரச்சனை சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்
Friday, May 30, 2008 | Labels: ஜல்லி | 2 Comments
Men Rules
We always hear "the rules" from the female side. Now here are the rules from the male side.
Shopping is NOT a sport. And no, we are never going to think of it that way.
--
Crying is blackmail.
--
Ask for what you want. Let us be clear on this one:
Subtle hints do not work!
Strong hints do not work!
Obvious hints do not work!
JUST SAY IT!
--
‘Yes’ and ‘No’ are perfectly acceptable answers to almost every question.
--
Come to us with a problem only if you want help solving it. That's what we do. Sympathy is what your girlfriends are for.
--
A headache that lasts for 17 months is a problem. See a doctor.
--
Anything we said 6 months ago is inadmissible in an argument. In fact, all comments become null and void after 7 days.
--
If you think you're fat, you probably are. Don't ask us.
--
If something we said can be interpreted two ways, and one of the ways makes you sad or angry, we meant the other one.
--
You can either ask us to do something or tell us how you want it done.
Not both
--
If you already know best how to do it, just do it yourself
--
Whenever possible, please say whatever you have to say during commercials.
--
Christopher Columbus did not need directions and neither do we.
--
ALL men see in only 16 colours, like Windows default settings.
--
Peach, for example, is a fruit, not a colour. Pumpkin is also a fruit.
We have no idea what mauve is.
--
If it itches, it will be scratched. We do that.
--
If we ask what is wrong and you say "nothing," we will act like nothing's wrong. We know you are lying, but it is just not worth the hassle.
--
If you ask a question you don't want an answer to, expect an answer you don't want to hear.
--
When we have to go somewhere, absolutely anything you wear is fine, Really.
You have enough clothes.
You have too many shoes.
--
I am in shape. Round is a shape.
--
Wednesday, May 14, 2008 | Labels: ஜல்லி | 2 Comments
சக படைப்பாளிகள் ஆபத்தானவர்கள் - சாரு நிவேதிதா
தன் அன்றாட வாழ்வில் நிகழும் அசிங்கங்களை, சந்தோஷங்களை, விமர்சனங்களை படு பச்சையாக, ஈரம் காயாத ஒரு குழந்தையைப் போல் அசல் தன்மையோடு எழுதிச் செல்லும் சாரு நிவேதிதா, தமிழிலக்கியத்தில் மறுக்க முடியாத ஆளுமை. தமிழ் இலக்கிய வகைமைகளை வேறு தளத்திற்கு நகர்த்தியவர். அதி துக்கமான கதையைக் கூட சுவாரஸ்யம் குன்றாமல் அறுநூறு பக்கத்திற்கு எழுதி வாசகனைப் படிக்க வைக்க சாருவால் மட்டுமே முடிந்திருக்கிறது. சமூகத்தின் மீதான தன் எதிர்வினையை ஒப்பீட்டளவில் பேசி யோசிக்கச் செய்யும் கலைத் தன்மையுடன் தீராநதிக்காக நீண்ட நேர்காணல் இது.
தீராநதி: சென்ற மாதம் பிரான்ஸ் போனீர்கள். அதற்கு முன்பாகக் கூடச் சென்றிருக்கிறீர்கள். அடிக்கடி பிரான்ஸ் போகிறீர்களே ஏன் சாரு?
சாருநிவேதிதா: பிரான்ஸ் எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கும் ஒரு நாடு. காரணம்_ அங்குள்ள சுதந்திரம்; சுதந்திரம் என்பதை இங்கே ஒரு வார்த்தையாகப் படிக்கிறோம் அவ்வளவுதான். ஆனால் அங்குள்ளவர்களின் சுதந்திரத்தை ஒரு கான்செப்ட்டா விஷ்வலைஸ் பண்ணி ஒரு அனுபவமாக எப்படி இருக்கிறது என்று சொன்னால் உங்களுக்கோ, எனக்கோ புரியாது. நிச்சயமாக இந்தியாவில் மட்டும் இருப்பவர்களுக்கு தெரியாது. அதை அங்கு சென்று ஃபீல் பண்ணும் போதுதான் அதனுடைய உண்மையான அர்த்தம் விளங்கும்.
நான் இங்குள்ள இமிகிரேஷன் ஆஃபீஸில் பிரெஞ்ச் விசா கேட்டு அப்ளை பண்ணி இருந்தேன். துணைக்கு நண்பரும் வந்திருந்தார். இமிகிரேஷன் ஆஃபீஸில் இருக்கும் ஓர் அதிகாரி என்னை விடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஒரு மணி நேரம் உட்கார வைத்து சித்திரவதை செய்தான். நாலு மலையாளிகள் மாறி மாறி கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். என்னிடம் பிரான்ஸ் போக விசா இருக்கிறது. இருந்தும் ‘நீங்க எதுக்குப் போறீங்க?’ என்றான். ‘நான் சுத்திப் பார்க்கப் போறேன்’ என்று பதில் சொன்னால் ‘உங்களைப் பார்த்தா திரும்பி வர்றவர் மாதிரி தோணலையே?’ _அது பத்தி உனக்கென்ன?_ கேட்கலை. கேட்டா விடமாட்டான். கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு பொறுமையா ‘நான் ஒரு எழுத்தாளன். பிரெஞ்ச் கலாசாரத்துக்கு எவ்வளவோ வேலை செய்திருக்கேன்.’ ஃபூக்கோ தெரிதா, சார்த்தரோட கலெக்ஷன் எல்லாம் மொழி பெயர்த்திருப்பதை எடுத்துக் காட்டினேன். ‘இல்லை... இல்லை... றிக்ஷீஷீஷீயீ வேணும்’ என்று தட்டிக் கழித்தான். ‘றிக்ஷீஷீஷீயீ தானே வேணும். இந்தா’ என்று என்னுடைய நாலு புத்தகங்களை எடுத்துப் போட்டேன். அவன் மலையாளி என்பதால், இதனுடைய அர்த்தமே அவனுக்குத் தெரியவில்லை.
சரி என்று ‘மாத்யமம்’ மலையாளப் பத்திரிகையை எடுத்துப்போட்டேன்_நான் மலையாளத்தில் பெரிய காலமிஸ்ட்! அவனோ இங்க வளர்ந்த மலையாளி. அவனுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. அவன் சென்னையிலேயே பல தலைமுறைகளாய் செட்டிலான மலையாளிபோல. அவனுக்கு அனேகமா மலையாளமே தெரியாது என்றே நினைக்கிறேன். இப்படி ஒரு மணி நேரம் இம்மி இம்மியாக டார்ச்சர் செய்தவன் ‘திரும்பி வர்றீங்களான்னு பார்க்குறேன்’ என்று சபித்துக் கொண்டே செல்ல விட்டான். இதே வேலைக்கு பாரிஸ் ஏர்போர்ட்டில் கண் சிமிட்டும் நேரம்தான் ஆனது. பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தவன் ‘சரி, நீங்க போகலாம்’ என்று அனுப்பிவிட்டான். ‘நான் இரண்டு முறை பிரான்ஸ் போனபோதும் ஒரு நொடிக்கு மேல் என்னைக் காக்க வைக்கவே இல்லை. இந்தியனோட மனப்பான்மை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நான் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி இந்தியாவிற்குள் நுழைந்தவுடன், ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குள் புகுந்துவிட்டது போல இருக்கிறது. உதாரணமாக, இமிகிரேஷன் ஆபீஸ். பதினைந்து மணிநேரம் பயணம் செய்துவிட்டு வந்த ஒரு பயணியை மறுபடியும் இரண்டு மணி நேரம் காக்க வைத்தே அனுப்பினான். பாரிஸிலேயும் இதே மாதிரி ஜனத்தொகைதான். இதே வேலைகள்தான். ஆனால் அவர்களால் எப்படி இவ்வளவு சுலபமாக கையாள முடிகிறது? மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா இந்த ஏரியாவில் எல்லாம் தமிழ் ஆதிக்கம் இருக்கிறது. மலேசிய மொழியில் 25 சதவீதம் தமிழ் கலந்திருக்கிறது. உதாரணமாக தமிழில் ‘கடை’ என்ற சொல்லுக்கு மலாய் மொழியிலேயும் ‘கடை’ தான்.
மலேசியாவில் விநாயகர் கோயிலோ, அம்மன் கோயிலோ இல்லாத ஊரே கிடையாது. இவ்வளவுக்கும் அது இஸ்லாமிய நாடு. தாய்லாந்தில் பார்த்தால் அம்மன் கோயில் இருக்கிறது. அங்கே போய் வழிபடுகிறவன் எல்லாம் தமிழன் கிடையாது, தாய்லாந்துக்காரன். அதுதான் முக்கியமான விஷயம். ஒரு விநாயகர் சிலை பெருசா... பிரமாண்டமாய் நடு ரோட்டிலேயே இருக்கிறது. அங்கே உட்கார்ந்து தாய்லாந்துப் பெண்கள் பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள். பாங்காக்கில் தமிழர்கள் ரொம்ப கம்மி _ ஒரு நூறு பேர் இருப்பார்கள். தாய்லாந்துக்காரிக்கு அந்த விநாயகர் சிலையின் மூலம் எங்கே என்று கூட தெரியாது. நான் ஒரு பெண்ணிடம் அதுபற்றிக் கேட்டபோது ‘கணேசா’ என்று பதில் சொன்னாள். அவர்கள் அப்படி ஒரு சுமுகமான வாழ்முறையை வைத்திருக்கிறார்கள். நிதானமான வாழ்நெறியை வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆனால் நம் ஊரில் எல்லாம் தலைகீழ். மலேசியா போவதற்காக ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஃபிளைட் வந்து இறங்குகிறது. இறங்கி நின்றதுதான் தாமதம். திபுதிபுவென்று எல்லோரும் ஃபிளைட்டில் ஏதோ டவுன் பஸ்ஸில் ஏறுவதைப் போல ஓடி ஏறுகிறார்கள். ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. அப்புறம்தான் விஷயம் புரிந்தது. பெட்டிகளை, சாமான்களை கிடைக்கின்ற இடத்திலெல்லாம் வைத்து ரொப்பி விட்டார்கள். ஒரு பத்துப் பதினைந்து கிலோ கொண்டு செல்லலாம் என்றால், இவர்கள் ஒரு வீட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.
நாங்கள் ஒரு ‘ஹேண்ட் பேக்’கைக் கூட வைக்க முடியாமல் மடியில் வைத்துக்கொண்டே போனோம். இந்த அளவுக்குக் கேவலப்பட்டு இருக்கிறார்கள் தமிழர்கள். அதைவிட இந்தியன் என்றால் சுத்தமாக மதிப்பே இல்லை. இந்த இந்திய மனப்பான்மையிலிருந்து நான் தப்பித்து, ஒரு நிதானமான தேசத்துக்குப் போக ஆசைப்படுகிறேன். இதுக்கு உதாரணமா இப்ப நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்குவோம். ஆறு, ஏழு வயசுள்ள ஒரு பெண் குழந்தை நேப்பியர் பிரிட்ஜ் மேல் நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, பாலத்திலிருந்த ஒரு ஓட்டையில் இடறி விழுந்து இறந்துவிட்டாள். இதுமாதிரி ஒரு சம்பவம் பிரான்ஸில் நடந்திருந்தால், பிரான்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்திருக்கும். இதுதான் சுதந்திரம். பிரான்ஸ் தேசமே அழிந்திடும். அப்படி அந்த அளவுக்கு மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய நாடு அது. எப்படி பாலத்தில் ஒரு குழந்தையை சாகடித்தாய் என்று அரசையே காலி செய்துவிடுவார்கள். அரசை மாற்றுவதெல்லாம் கிடையாது. சுத்தமாக துடைத்தெறிந்துவிடுவது. அந்த அளவுக்கு அம்மக்கள் பதறிவிடுவார்கள். இங்கே அது வெறும் நியூஸ். ஏனென்றால், அடுத்த நாளே அறுபது குழந்தைகள் பலியென்று நியூஸ் வந்துவிடும். நமக்கு இதுவெல்லாம் நியூஸ் மட்டுமே. ஆக, பிரான்ஸ் மனித உரிமையை, சுதந்திரத்தை மதிக்கக் கூடிய நாடு என்பதால், திரும்பத் திரும்ப அங்கே போக நான் ஆசைப்படுகிறேன்.
‘ராஸலீலா’ என்ற 700 பக்க நாவலை நான் கொடுத்திருக்கிறேன் என்றால்... ஆறு கோடி ஜனங்களில் அதை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? அதன் வெளியீட்டு விழா ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. ஒரு அறுபது பேர் வந்திருந்தார்கள். அங்கு கனிமொழி பேசிய பேச்சு ஒரு தலைப்புச் செய்தி. ‘பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னைத் தத்தெடுத்துக் கொண்டவர் சாருநிவேதிதா’ என்றார்.
அது எவ்வளவு பெரிய ஸ்டேட்மெண்ட். இது பற்றி யாருக்குமே கவலை கிடையாது. இது பற்றி ஒரு செய்தி கூட வரவில்லை. சரி, விழாவையெல்லாம் விடுங்கள். அந்த விழாவுக்கே இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்தார் நல்லி செட்டியார். ஒரு நாவலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அதை வைத்து ஒரு விமர்சனம், பேச்சு எதுவுமே வரவில்லை. இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், பிரான்ஸில் போய் பிரெஞ்ச்சில் மொழிபெயர்த்து அங்கேயாவது நான் ஒரு எழுத்தாளன் என்ற இடத்தைப் பிடிப்போம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் மொழி பெயர்ப்பாளருக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ராஸலீலாவின் மொழிநடை கொஞ்சம் லகுவாக இருக்கும். ஆனால், ‘ஜீரோ டிகிரி’யைத்தான் அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தத் தமிழ் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதனால் மொழிபெயர்ப்பில் ஏÊற்படும் சந்தேகத்தைச் சரி செய்யவும், சரியான அர்த்தத்தோடு மொழி மாற்றம் செய்யவும் நான் அடிக்கடி அங்கே சென்று அவருக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். இதனோடேயே ஒட்டி இங்குள்ள படித்த ஆட்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒன்றை நான் சொல்ல வேண்டும். நம் அசோகமித்திரன் எழுத்துக்கு இலக்கியச் சிந்தனை, சாகித்ய அகாடமி அவார்டு எல்லாம் சாதாரணம். அவர் நோபல் அவார்டு வாங்கக் கூடிய அளவுக்குத் தகுதியான ஆள். இந்திய அளவில் இப்படி மூன்று பேரைச் சொல்லலாம். மஹாஸ்வேதா தேவி, அசோகமித்திரன், பால் சக்காரியா. இந்த ரேஞ்சில் அசோகமித்திரனை நான் மதிக்கிறேன். படித்தவர், இங்கிலீஷ் தெரிந்தவர், உலக இலக்கியம் அறிந்தவர். அவருக்கு இன்னொரு விதமான ரைட்டிங் ஸ்டைல் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்தை பிறர்மேல் திணிக்கக் கூடாது. உதாரணமாக சாருநிவேதிதாவுடைய ரைட்டிங் பிடிக்காமல் இருக்கலாம். அதற்கு எல்லோருக்குமே சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய எழுத்து எல்லோருக்கும் பிடித்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘இப்போது எழுதக் கூடிய பாமுக்_அவருக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். அவர் இப்படியெல்லாம் எழுதவில்லை’ என்கிறார். இது சுத்தப் புரட்டல். நான் பத்து, இருபது வருடமாக ஒரு விஷயத்தை கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என்னை மாதிரி இந்த உலகத்தில் பதினைந்து பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, வில்லியம் பர்ரோஸ். என் கட்டுரைகளில் வில்லியம் பர்ரோஸ் பெயர் வராத இடமே கிடையாது. சாதாரணமாக ‘நமீதா’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டால் கூட வில்லியம் பர்ரோஸை உள்ளே விடுவேன். அந்த அளவுக்கு வில்லியம் பர்ரோஸை கிரகித்து வைத்திருக்கிறேன். அப்புறம் கேத்தி ஆக்கர். இப்படி பெரிய லிஸ்ட்டே என்னிடம் இருக்கிறது. இவர் சொல்வார் வில்லியம் பர்ரோஸ், கேர்த்தி ஆக்கர் எல்லாம் யார் படிக்கிறார்கள் என்று. உலக இலக்கியம் தெரிந்த ஆள்தானே நீங்கள்? அப்புறம் இதை ஏன் மறைக்கிறீர்கள். வேண்டுமென்றே தெரிந்தே என்னைப் பழிவாங்குகிறீர்கள் அல்லது சதி செய்கிறீர்கள் என்று நான் சொல்வேன். ஏனென்றால், ஓரான் பாமுக்குக்கு முந்தின வருடம் நோபல் பரிசு வாங்கினவர் எல்ஃப்ரீட் ஜெலினெக். அவங்க எப்படி எழுதுறாங்க? நான் எழுதுகின்ற செக்ஸ§வாலிட்டியெல்லாம் தூசு. ஒரு பெண்ணுக்கு நாற்பது வயது வரைக்கும் செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸே இல்லை. அவளுடைய அம்மா அவளை பீத்தோவன் மாதிரி பெரிய இசைக் கலைஞியாக்க ‘அற்ப, லோகாயத விஷயங்களில் எல்லாம் நீ ஈடுபடக் கூடாது’ என்று சொல்லி, ஒரு கலைஞனாக வளர்த்திருக்கிறாள். நம்ம ஊர் சிறு பத்திரிகை இலக்கியவாதிகள் எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டார்கள், குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊர் ஊரா சுற்றித் திரிவார்கள். உலக இலக்கியம், உலக இலக்கியமென்று பேசித் திரிவார்கள். அப்படி அவர்கள் உலக இலக்கியம் பண்ணினால் பரவாயில்லை. ஆனால் அதுமட்டும் நடக்காது. இதே மாதிரி ஜெலினெக்கின் கதாநாயகிக்கு அவள் அம்மா கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. ஒரு பாய் ஃபிரெண்ட் கிடையாது. ஒரு டிஸ்கோதெ கிடையாது. பிராக்டிஸ் பிராக்டிஸ் என்று அவள் ஒரு பியானோ டீச்சர் போல ஆகிவிட்டாள். இங்குள்ள இலக்கியவாதி உலக இலக்கியம், உலக இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு ஒரு மாவட்ட இலக்கியம்தான் படைக்கிறான். எப்படி மாவட்ட இலக்கியம் என்று சொல்கிறேன் என்றால், மாவட்ட அளவில் ஃபுட்பால் விளையாடுகின்றவன் போய் உலக அளவில் விளையாட முடியுமா? அதுபோல் பீத்தோவன் மாதிரி ஆக பயிற்சி கொடுக்கப்பட்டவள் கடைசியில், ஒரு டீச்சர் லெவலுக்கே வர வேண்டியதாகிவிட்டது. அவள் ஒரு முறை புளூ ஃபிலிம் பார்க்கப் போவாள். அங்கே டிஷ்யு பேப்பர் எல்லாம் சிதறிக் கிடக்கும். அந்த டிஷ்யு பேப்பரில் ஆண்கள் சுய மைதுனம் செய்து துடைத்துப் போட்டிருப்பார்கள். அதை எடுத்து அவள் முகர்ந்து பார்ப்பாள். அங்கேயே சிறுநீர் கழிப்பாள். திரையரங்கை விட்டு வெளி வந்து கொண்டிருக்கும் வழியில், காரிலேயே இருவர் சம்போகம் செய்து கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்து மறுபடியும் சிறுநீர் கழிப்பாள். அப்போது காரிலிருந்து இறங்கி அவளை அடிக்க ஓடி வருவான் அவன். இவள் தப்பி ஓடுவாள். இதுதான் அவளுடைய செக்ஸ§வல் எக்ஸ்பீரியன்ஸ். இதையே நினைத்து நினைத்து உடம்பெல்லாம் குண்டூசி எடுத்துக் குத்திக் கொள்வாள். அந்த நேரத்தில் ஒரு ஸ்டூடெண்ட் இவளை லவ் பண்ணுவான். நாம் இருவரும் உறவு கொள்ளலாம் என்பான். இவள் உடனே அவனுக்கு ஒரு லெட்டர் எழுதுவாள். அது என்னவென்றால், உடனே அவளுடன் உறவு கொள்ளக் கூடாதாம். முதலில் உடல் முழுவதும் குண்டூசியால் குத்த வேண்டும். ஒரு இரும்புக் கிடுக்கியை எடுத்து என்னுடைய உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பை ‘டைட்’ பண்ணவேண்டும். இப்படியெல்லாம் இவள் சொன்னவுடன் அவன் மிரண்டு போய் ஓடியே விடுவான். அவனும் ஓடிவிட்டான் என்றவுடன் இவள் இதற்கெல்லாம் நம்முடைய அம்மாதான் காரணம் என்று நினைத்து, அந்தக் காமம் தாளமுடியாமல் தன் அம்மாவையே ‘ரேப்’ செய்துவிடுவாள். அம்மாவை கடித்துக் குதறி விடுவாள். இக்காட்சி நாவலில் துல்லியமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவள் ஒரு இடத்தில் சொல்வாள் ‘நான் என் அம்மாவின் யோனி ரோமத்தைப் பார்த்தேன்’ என்று. இந்த நாவல் ஒரு படமாக வெளிவந்திருக்கிறது. இந்த சீனை எப்படி விஷ§வல் பண்ணி இருக்கிறார்கள் என்று பார்க்க அந்தப் படத்துக்குப் போனேன். படம் இக்காட்சியில் தோற்றுப் போய் இருந்தது. ஏனென்றால், அவள் வெறும் வசனமாக இதைச் சொல்லுவாள். நாவலில் வரும் 100 சதவீதத்தில் 5 சதவீதம் கூட படத்தில் இல்லை. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படி எழுதுகிறாள் ஜெலினெக். அவள் தன் ‘பியானோ டீச்சர்’ நாவலைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறாள் தெரியுமா? இது என்னுடைய ஆட்டோ பயோகிராஃபி என்று சொல்லி இருக்கிறாள். இந்த ரேஞ்சில் உலக இலக்கியம் போய்க் கொண்டிருக்கிறது. அவளுக்கு நோபல் அவார்டு கொடுத்திருக்கிறார்கள். மலையாளத்தில் இன்றைக்கு என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு எல்பிரீட் ஜெலினெக்கைவிட சாருவின் எழுத்து நன்றாக இருக்கிறது என்கிறார்கள். நானும் அப்படித்தான் ஃபீல் பண்ணுகிறேன். ஜெலினெக்கை நாம் நன்றாக எழுதிவிட்டோம் என்ற மன திருப்தியில் இருக்கிறேன். என்னையும் என் எழுத்தையும் விடுங்கள். ஜெலினெக் பற்றி இருட்டடிப்பு செய்துவிட்டு ஏன் பாமுக் பற்றி பேசுகிறார் அசோகமித்திரன்? ஏதோ ‘ஷாக் வேல்யு’விற்காக எழுதியதில்லைங்க இது. என்னுடைய லைஃப். நீங்கள் வேண்டும் என்றால் இப்படி சாக்கடையில் கிடக்கிறானே என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
நொய்டாவில் நாற்பது ஐம்பது குழந்தைகளை ரேப் பண்ணி கொன்று விட்டு மொத்தமாகப் புதைத்துவிட்டார்கள் என்றால், இதுமாதிரி உலகத்தில் எங்கு நடந்திருக்கிறது? இங்கே செக்ஸ§வாலிட்டி என்பது ஒரு பிரச்னை. நான் அதை எக்ஸ்போஸ் பண்ணுகிறேன். இதைப்போய் ஷாக் வேல்யுவுக்காக எழுதுவதென்றால் எனக்கு வேறு வேலை இல்லையா? எனக்கு இதனால் என்ன நல்ல பேர் வந்துவிடப் போகிறது. கெட்ட பேர்தானே வரும். இந்த அதிர்ச்சியினால் எனக்கு என்ன லாபம். நீங்கள் வேண்டுமென்றால் கர்ப்பகிரகத்திற்குள்ளாக உட்காந்து கொண்டு கர்ப்பகிரக இலக்கியம் எழுதிக் கொண்டு இருங்களேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
தீராநதி: பேசிக்கொண்டே திசை மாறிவிட்டோம். பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?
சாரு: பிரான்ஸில் ஒரு மனிதனின் சராசரி வயது 95. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்கு அங்குள்ள குளிரும் ஒரு காரணம். அப்புறம் டென்ஷன் இல்லாது வாழ்வது. ஒருவரின் உயிர் வாழ்வுக்கு அவனுடைய கலாச்சாரமும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். தினமும் நொய்டா கில்லிங் மாதிரி பேப்பரில் படித்துக் கொண்டே இருந்தால், எப்படி உங்களுக்கு ரத்தக் கொதிப்பு வராமல் இருக்கும். அதனால் ஆயுள் விஷயத்தில் இவ்வியல்பான காரணங்கள் கூட சேர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
பாரிஸ் பற்றி நான் எழுதும்போது அங்கே விபத்தே நடப்பதில்லை என்று எழுதி இருந்தேன். உடனே ஷோபா சக்தி மாதிரி ஒரு ஆள் ‘சும்மா இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் தெரியாமல் எழுதுகிறார்’ என்றார். விஷயம் என்னவென்றால் இங்கு எத்தனை விபத்து நடக்கிறது. அங்கு வருடத்தில் ஒன்று என்றால் இங்கு தினமும் விபத்து. இதை ஒப்பீடு செய்து பார்த்துதான் நான் எழுதுகிறேன். வருடத்திற்கு ஒன்று நடந்தால் அது விபத்தா? இந்தப் பரிகாசத்தையெல்லாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.
அங்கே ரயிலில் ஒரு பெண், இருபது வயது மதிக்கத்தக்கவள். அவளால் கூட்ட நெரிசலில் நிற்கவே முடியவில்லை. குறுகலான இடத்தில் எப்படியோ பேலன்ஸ் செய்துகொண்டே ‘மதாம் பவாரி’ நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நூறு வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் அது. அதனால்தான் அங்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு கலாச்சாரத்துடனும் இலக்கியத்துடனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும். வெறும் குப்பையையே தின்று கொண்டிருந்தால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்? எந்த உடற்பயிற்சியும் இல்லை. தின்பதும் குப்பை, படிப்பதும் குப்பை, குடிப்பதும் குப்பை. இங்கே எங்குமே நல்ல வகை மதுவை வாங்க முடியாது. எல்லாமே கலப்படம். எல்லாமே குப்பை. எப்படி நீண்ட நாள் வாழ முடியும்? அங்குள்ள தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு ஊடாடுவதே கிடையாது. அங்கேயும் போய் இந்தியக் குப்பையை இறக்குமதி பண்ணி அந்தக் குப்பையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமா, அங்கேயே கிடைக்கின்ற மட்டரகமான விஸ்கியை குடிக்கிறார்கள். பிரெஞ்ச்காரர்கள் வைன் தான் குடிப்பார்கள். தமிழன் வைனே குடிப்பதில்லை. அங்கு வேலை செய்யாமலே, அவ்வரசு அகதிகளுக்கும், வேலையில்லாதவர்களுக்கும் ஆயிரம் யூரோ பணத்தை உதவித் தொகையாகக் கொடுக்கிறது. ஆயிரம் யூரோ என்பது அங்குள்ள ஒரு தபால்காரரின் சம்பளம். ஆக என்ன ஆகிறது? வேலைக்குப் போகாமல் பணம். நிறைய நேரம். குடிதான் ஒரே கதி. ஞிவீணீsஜீஷீக்ஷீணீ என்போமே, புலம் பெயர்ந்து வாழ்கின்ற அந்த வலியோடு குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே இறந்து போகிறான் தமிழன். சராசரி நூறு வயது வரை வாழ்கின்ற ஒரு நாட்டில், நம் ஆட்கள் ஐம்பது வயதில் செத்துப் போகிறார்கள் என்பது மிகப் பயங்கரமாக இருக்கிறது எனக்கு.
தமிழர்கள் வீட்டில் பிரெஞ்சுதான் பேசுகிறார்கள். ஆனால், ஒரு பிரெஞ்ச் சினிமா பற்றியோ, அங்குள்ள இலக்கியம் பற்றியோ ஒரு பிரக்ஞையும் இல்லை இவர்களுக்கு. பாரிஸில் பொம்பிதூ நூலகம் என்று ஒரு இடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை உலக அளவில் கட்டிடக் கலையின் அதிசயம் என்று சொல்வார்கள். வெறும் கண்ணாடியும் ஸ்டீலையும் மட்டுமே பயன்படுத்தி கட்டி இருக்கிறார்கள். அந்த லைப்ரரி, உலக அளவில் புகழ் பெற்றது. அங்கு போகவேண்டும் என்று ஷோபா சக்தியிடம் கேட்டபோது அவர், ‘நம்மையெல்லாம் அங்கே விட மாட்டார்கள்’ என்று பதில் சொன்னார். இருபது வருடமாக பிரான்ஸில் வசிப்பவர் சொன்ன பதில் இது. ஆனால், அங்கே ‘புக்’கை எடுத்துக்கோ எடுத்துக்கோவென்று எடுத்து நீட்டுகிறான். ‘இந்தப் புத்தகம் வேண்டும்’ என்றால் நான் அதன் உறுப்பினராக இருந்தால் நமக்குத் தேவையான புத்தகத்திற்கு உரிய பணம் கட்டி விட்டு பெற்றுக் கொள்ளலாம். அதன் உரிய விலையை விட அரை, கால் பங்கு பணம் மட்டுமே வசூலிக்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்று எடுத்து விட்டால், திருடன் என்று சொல்லி ஜெயிலில் வைப்பார்கள். நூறு, ஆயிரம் பக்கம் ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள பல நவீன வசதிகள் அங்கே லைப்ரரியிலேயே இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் அங்கே இருக்கிறது. என்னுடைய புத்தகங்கள் கூட இருக்கிறது. அது ஒரு ஆராய்ச்சிக் கூடம். வாழ்நாள் பூரா உட்கார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கலாம். எவனும் கேட்கமாட்டான். ஆனால் நம் ஷோபா சக்தி என்ன சொல்கிறார் என்றால், ‘நம்மையெல்லாம் அங்கே உள்ளே விடமாட்டான்’ என்கிறார். அவர் அப்படிச் சொன்னவுடன் நூலகத்தின் வாசலிலேயே சாயுங்காலம் வரை உட்கார்ந்து இருந்துவிட்டு திரும்ப வந்துவிட்டோம். மறுநாள் பிரெஞ்சில் எழுதக்கூடிய என் நண்பர் கலாமோகனோடு அந்த லைப்ரரிக்குப் போனேன்.
விஷய ஞானத்தை எடுத்துக் கொண்டால், ஜோதிகா இப்போது முழுகாமல் இருக்கிறார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புத்தகக் கடைக்குப் போனால் ரமணி சந்திரன்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த வீட்டிற்குள் போனாலும் சீரியல் ஃபுல் ஸ்விங்கில் ஓடுகிறது. இங்கே தமிழன் எப்படி இருக்கிறானோ அதே போலவே அங்கேயும் இருக்கிறார்கள். ஒரு தமிழர் வீட்டுக்குப் போனேன். அவர் ஈழத் தமிழர் அல்ல. அவரும் அவருடைய மனைவியும் எப்போதாவது தான் தமிழில் பேசிக் கொள்கிறார்கள். அவருக்கு மூன்று குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளுக்குமே ஒரு தமிழ் வார்த்தை கூடத் தெரியாது. ஸோ... குடும்பமே பிரெஞ்ச் குடும்பம் போல இருக்கிறது. பெயர்களை மட்டும் தமிழில் வைத்திருக்கிறார். ராமசாமி, முத்துசாமி என்பதுபோல எல்லாம் தமிழ்ப் பெயர்கள். ஆனால் தமிழ் தெரியாது. அவரிடம் நான் ‘ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாமல் பண்ணி விட்டீர்களே’ என்று வருந்திக் கேட்டபோது, அவர் சொன்னார் (இவர்தான் என் நாவலை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பவர்) ‘தமிழ் தெரிந்து என்ன பண்ணப் போகிறோம். சீரியல் பார்க்கலாம். சீரியலா, அது அவ்வளவும் குப்பை. பள்ளிக் கூடத்தில் கலைவிழா என்று சொல்லிக் கொண்டு ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’ என்று இடுப்பை அசைத்து அசைத்து டான்ஸ் ஆடலாம். இது எதுக்கு’ என்றார். மேலும், தமிழ் வீடுகளில் ஐந்து வயதுக் குழந்தை அம்மாவைப் பார்த்து ‘வாடி என் கப்பக்கிழங்கே’ என்ற பாட்டை பாடுகிறதாம். அம்மா என்ன சொல்கிறாள் ‘எப்படி பாடுகிறது பாருங்க என் குழந்தை’ என்று புளகாங்கிதம் அடைகிறாளாம். ‘இந்தத் தமிழ் எனக்கு வேண்டாம். குப்பைக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுக்கும் இந்த மொழி வேண்டாம் என்று விட்டுவிட்டேன்’ என்றார்.
பிரான்ஸ் எப்படிப்பட்ட தேசம் தெரியுமா? ‘ரேப்’ என்பதே இல்லாத தேசம். இது எனக்கு ஒரு விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.
தீராநதி: நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், தமிழ்நாட்டுத் தமிழனும் பிரான்ஸ் தமிழனும் ஒன்று போலவே இருக்கிறார்கள் என்பது புரிகிறது. உலக அளவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுபோலவே சிந்திக்கிறானே! அது எப்படி சாரு?
சாரு: அது கண்டுபிடிக்க வேண்டிய ஒரு விஷயம். பாரிஸில் ‘சோர்போன் யுனிவர்சிடி’ இருக்கிறது. அங்கே சேர்ந்து படிக்கலாம். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடியை விட நல்ல யுனிவர்சிடி அது. அங்கே ஃபூக்கோ போன்ற மேதைகள் பாடம் நடத்தி இருக்கிறார்கள். அந்த யுனிவர்சிடிக்கு போய்ப் பார்த்தேன்.
சுதந்திரம் என்று சொல்வோமே, அந்த சுதந்திரத்திற்கே தாய் பூமி பிரான்ஸ்தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அங்கே நம் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இப்போது இறந்து போனாரே எல்.டி.டி.ஈ.யுடைய பிரதிநிதி ஆன்டன் பாலசிங்கம், அவரின் இரங்கல் செய்தியைச் சொல்லும் ஒரு போஸ்டரை ஒரு கடையில் ஒட்டினபோது அக்கடைக்காரர் ‘இங்கே ஒட்டாதேப்பா. இது பல அரசியல் கொள்கைகள் உடையவர்கள் வந்து போகின்ற இடம். அதனால் வேண்டாம்’ என்று தடுத்திருக்கிறார். அன்று இரவே அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள்.
தீராநதி: யார் தமிழர்களா?
சாரு: வேறு யார் அடிப்பான். அங்கு போலீஸ்காரன் அடித்தால் நான் முன்பே சொன்னேனே, தேசமே பற்றி எரியும் என்று. இது ஏதோ தமிழனுடைய பழக்கம் மட்டுமல்ல; இது ஒரு இந்திய மனப்பான்மை. உலகம் பூராவும் டீயில் பால் கலக்காமல்தான் டீ குடிக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் பால் கலந்த டீயை உங்களால் குடிக்க முடியும். பால் கலக்காத டீயைக் குடித்தால் இருதயத்திற்கு நல்லது. பால் கலந்த டீ அந்த நல்ல தன்மையை எடுத்து விடும். இப்படி எல்லாவற்றையுமே நச்சாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள் இந்தியர்கள். கேட்டால், பெரிய ஆன்மிக பூமி என்கிறான். இதைக் கிண்டல் செய்தால் ‘உனக்கு தேசப்பற்றே இல்லை’ என்கிறான்.
தீராநதி: எந்த எழுத்தாளனுக்கும் இல்லாத அளவு வாசகர் மத்தியில் உங்களைப் பற்றி மட்டும் பல கதைகள் உலவுகின்றன. நீங்கள் ஒரு ஸ்திரீலோலன், ஆண்மோகி (ரீணீஹ்). அரவாணி, குடிகாரன், நரமாமிசம் தின்பவன் இப்படி ஏகப்பட்ட புனைவுகள். இந்தக் கதைகளுக்கெல்லாம் உங்களின் எழுத்தே ஒரு காரணமாக இருக்குமா?
சாரு: ஆமாம். என்னுடைய எழுத்துதான் காரணம். பொதுவாக நான் ஒரு குழந்தை மாதிரி. என் மனதில் தோன்றுவதை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதுகிறேன். எனக்கு எதைப் பற்றியும் பயம் கிடையாது. நீங்கள் ‘ராஸலீலா’வைப் படித்தாலே அது புரியும். பயம் இருந்தால் இதை எழுத முடியாது. சமூகத்தினுடைய மதிப்பீடுகள் பற்றி அல்லது புகழ் பற்றி எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. இப்படி இவ்விஷயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு ஆள் அதை வெளிப்படையாகப் பேசும்போது சிக்கல் வருகிறது. அநேகமாக எழுத்தாளர்களிலேயே கம்மியாக குடிப்பவன் நானாகத்தான் இருப்பேன். இந்த விஷயத்தில் ஒரு ராணுவ ஒழுங்கை நான் கடைப்பிடிக்கிறேன். தொட்டுக் கொள்ள ஆலிவ்காய் இல்லை என்றால், அந்த இடத்தில் குடிக்கவே மாட்டேன். நண்பர்கள் எல்லோரும் குடித்தால் கூட வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பிறகு கலப்படம் இல்லாத உயர்ந்த வகை மது இருந்தால் மட்டுமே குடிப்பேன். பாரிஸிலிருந்து திரும்பிய கொஞ்ச நாட்கள் திடீரென்று குடிக்கவே இல்லை. ஏனென்றால், அச்சமயம் நான் பல மியூசிக் காசட்டுகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இதுவே ஒரு போதையைப்போல இருக்கிறதென்று குடிக்கவே இல்லை. இதுபோல் வெளிப்படையாக நான் பேசுவதால் வருகின்ற பிரச்னைகள் இது. ஒரு நாள் ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது _ அந்த ஆட்டோ டிரைவர் என்னுடைய போட்டோவை எங்கோ பார்த்திருப்பான் போல. ஆனால் என் எழுத்தில் ஒரு வார்த்தை படித்தது இல்லை _ ‘உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா சார்’ என்று தயங்கிக் கொண்டே ஆரம்பித்தான். என்ன விஷயம் என்றதும் ‘நீங்க கண்ணதாசன் மாதிரி குடிச்சிட்டே இருப்பீங்களாமே?’ என்றான். ஆமாம் என்றதும், ‘ஒரு நாளைக்கு எவ்வளவு குடிப்பீங்க’ என்றான். காலையில் பல் துலக்கிவிட்டு ஒரு குவார்ட்டர் அடிப்பேன். பிறகு எழுத ஆரம்பிப்பேன். மதியம் ஒரு குவார்ட்டர், நைட் தனியா இருந்தால் ஒரு குவார்ட்டர், நண்பர்களுடன் இருந்தால் ஒரு ஆஃப் அடிப்பேன் என்றேன். எதைச் சொல்லியும் அவனுக்குப் புரியப் போவதில்லை. நான் குடிக்க மாட்டேன் என்றால், அவன் நம்பப் போவதில்லை. அப்புறம் எதற்கு நீட்டிக்கொண்டு?
இதேமாதிரி செக்ஸ் விஷயத்தில். ஸ்திரீ லோலன் _அது என்ன வார்த்தை என்றே எனக்குப் புரியவில்லை. ஸ்திரீகள் மேல் எல்லோருக்குமே ப்ரியம் இருக்கிறது. கவர்ச்சி இருக்கிறது. அதை நூற்றுக்கு 99 சதவீதம் ஆண்கள் மறைக்கிறார்கள். நான் மறைப்பதில்லை. ஸ்திரீலோலன் என்றால் போகின்ற வருகின்ற பெண்களை எல்லாம் பிடித்து ‘ரேப்’ பண்ணுகின்றவன் கிடையாது. எல்லோரும் மனசுக்குள்ளாகவே அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வெளியே சொல்லிவிடுகிறேன். இதுதான் வித்தியாசம். ரீணீஹ்என்பதை அல்லது லெஸ்பியன் என்பதை ரொம்பத் தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். ஒருவன் எப்படி வாழ்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவன் ஒருவனைச் சார்ந்தது. உங்களை அவன் ஒன்றும் பண்ணுவதில்லை. அவன் திருடவில்லை, கொள்ளையடிக்கவில்லை. இன்னொரு பெண்ணை ஈவ்டீஸிங் செய்யவில்லை. ஆணோடுதான் வாழ்வேன் என்று அவன் சொல்கிறான். அது அவனுடைய சுதந்திரம். ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் தராமல் சட்டம் போட்டு வைத்தால் அது தப்பு. இதை நான் தட்டிக் கேட்டால், ‘நீ என்ன ரீணீஹ்யா?’ என்கிறான்.
இது பொம்பளைங்களே இல்லாத நாடு. எழுத்தாளன் என்றால் எந்தப் பொம்பளை நம்மை பார்ப்பாள்_ பார்ப்பாங்க என்று திருத்திப் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு பெண்ணியவாதிகள் எல்லாம் ‘அவள், இவள்’ என்று சொல்லிவிட்டார் என்று குதிப்பார்கள். எழுத்தாளன் என்பவனுக்கு இங்கு வேல்யுவே கிடையாது. நான் என்ன நடிகனா? நானும் நடிகர் பார்த்திபனும் நின்று கொண்டிருந்தால் எல்லோரும் ஓடி பார்த்திபனிடம்தான் ஆட்டோகிராஃப் வாங்குவார்கள். வெளிநாடுகளில் வாழும் ஆண்களுக்கு பெண்களோடு வாழ்ந்து வாழ்ந்து அலுத்துவிட்டது. அதனால் அவன் வேறு ஒன்றைத் தேடுகிறான். இங்கே ஒரு இளைஞனும் அவனுடைய காதலியும் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கல்யாணம்தான் செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் போலீஸ் பிடித்துவிடும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட போய் தங்க முடியாது. உடனே ரெய்டு செய்து விபச்சார வழக்கில் உள்ளே தள்ளி விடுவார்கள்.
திருமணச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா என்று கேட்பார்கள். இதை பிராக்டிக்கலா நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரியான இறுக்கமான ஒரு சமூகத்திற்குள் நாம் ஆசைப்படுவது எதுவும் கிடைப்பதில்லை. தடைசெய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. ஆக, இச்சமூகம் என்னை ஸ்திரீலோலனாகத்தான் இருக்க வைக்கிறது. அப்புறம், நாம் எப்போதுமே வாழ்க்கையின் சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே பேசிக்கொண்டு, சௌகர்யமான இலக்கியத்தை மட்டுமே படைத்துக் கொண்டிÊருக்கிறோம். நான், பிரேதக் கிடங்கில் இருக்கக்கூடிய ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் அவனுடைய வாழ்க்கை என்ன என்று ஆராய்ச்சி பண்ண நினைக்கிறேன். அதை வைத்து ஒரு கதை எழுதினால் உடனே இவன் பிரேதத்தைப் புணருகிறவன் என்றும்; இவனுக்கு நெக்ரோஃபீலியா என்றும் பேசுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்?
தீராநதி: வழக்கமான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு நீங்கள் வாழ்வின் வேறு பக்கங்களைப் பற்றி அதிகம் எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா?
சாரு: போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னை ஒருவர் பிரகடனப்படுத்திக் கொள்கிறார் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால் இந்தப் பிரகடனங்கள் இலக்கியத்தை உருவாக்காது. கோஸின்ஸ்கி, இடாலோ கால்வினோ, உமபர்தோ எக்கோ போன்றவர்களெல்லாம் இலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உமபர்தோ எக்கோ ஒருவர்தான் தியரிடீஷ்யன். அவர்தான் போஸ்ட்மாடர்னிசம் பற்றிப் பேசுகிறாரே தவிர, மார்க்கேஸ் இருக்கிறாரே அவர் என்ன போஸ்ட் மாடர்னிஸ்ட்டா? அதெல்லாம் கிடையாது. அவர் தன் போக்கில் இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார். போஸ்ட் மாடர்னிஸம் என்பது விஷயங்களை இன்னும் தெளிவாக இன்னும் ஜனநாயக ரீதியாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் மாஜிக்கல் ரியலிஸ்ட்டா என்று கேட்டால் மகாபாரதமே மாஜிக்கல் ரியலிஸம்தானே. அதிலும் போஸ்ட் மாடர்னிஸத்திற்கான கூறுகளை நாம் பார்க்கலாம். தெரிதாவின் பல கோட்பாடுகளை கிருஷ்ணனுடைய கதைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். போஸ்ட் மாடர்னிஸ்ட், மாஜிக்கல் ரியலிஸ்ட் என்பதெல்லாம் எனக்குப் பொருந்தாது. நான் ஒரு படைப்பாளி அவ்வளவுதான்.
தீராநதி: பின் நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகம் செய்வது, அது சம்பந்தமான பிரதிகளை உருவாக்குவது, இதையெல்லாம் நீங்கள் செய்யும்போது, ஏன் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக அடையாளப்படத் தயங்குகிறீர்கள்?
சாரு: இங்கே போஸ்ட் மாடர்னிஸத்தை உள்வாங்கிக் கொண்டு எழுதியவர்களே ரொம்பவும் கம்மி. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் இங்கு யார் முதலில் போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக எழுதினார்கள் என்று பார்த்தால், தமிழவன் என்ற ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதியதில் உயிரே கிடையாது. பிறகு எம்.ஜி.சுரேஷ் தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுகிறார்.
அவரை தமிழவனின் வாரிசு என்றுகூடச் சொல்லலாம். இப்படி உயிரில்லாத சவத்தை உருவாக்குவதால் அவரை வாரிசென்று சொல்கிறேன். முதலில் இலக்கியம் என்றால் அது போஸ்ட் மாடர்னிஸமோ அல்லது வேறு எந்த இஸமோ, அதில் உயிர் இருக்கவேண்டும். உயிர் இல்லாத ஒன்றை எழுத்தென்றே ஒத்துக்கொள்ளமுடியாது. வெறும் லேபிள் ஒட்டி விற்கப்படும் பொருட்களைப் போன்றதுதான் அது. இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயரைச் சொல்வதற்கே பயமாக இருக்கிறது. அப்புறம் மூன்று தலை உருளும் என்பார்கள். இவர்கள் எல்லாம் உயிர் இல்லாத எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சினை. நீட்ஷே, ஃபூக்கோ பற்றி எவ்வளவு காலமாக நிறப்பிரிகையில், படிகளில் எம்.டி.எம், தமிழவன், ரவிக்குமார், அ. மார்க்ஸ், நான் எல்லோரும் சேர்ந்து விவாதித்தோம். அதைப்பற்றிய மொழி பெயர்ப்புகள் செய்தோம். இதெல்லாம் என்னுடைய ஃபிக்ஷன் மேக்கிங்கிற்கு எவ்வளவு தூரம் உதவும்... அதற்கு மட்டுமே இவை. இந்த உலகத்தை எவ்வாறு பார்ப்பது, என்னுடைய கான்செப்ட், விஷன் இவற்றிக்கு இவை மாற்றுப் பார்வையை கொடுத்திருக்கின்றன. அவ்வளவுதான் இவற்றின் முக்கியத்துவம். நான் என்ன போஸ்ட் மாடர்னிஸத்தின் தியரிடீஷ்யனா? இங்கே மொத்தம் படிப்பவர்களே ஆயிரம் பேர்தான். இங்கே அதற்கெல்லாம் ‘ஸ்கோப்’பே கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று சொன்னால் ஓ.கே. இருக்கலாம். நான் அதற்கான லிட்ரேச்சரை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னால் நிறையப்பேர் இருக்கிறார்கள். அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, கு.பா.ரா., ப.சிங்காரம் இப்படி பலபேர்... கடல் மாதிரியான ஆட்கள் இருக்கிறார்கள். அசோகமித்திரனுக்கு போஸ்ட் மாடர்னிஸம் என்றால் என்னவென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி எங்கேயும் எந்தக் கருத்தும் சொன்னதில்லை.
இங்கே போஸ்ட் மாடர்னிஸ்ட் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் முன்னவர்களைவிட ரொம்ப ரொம்ப ‘வீக்’ என்பதுகூட சரியாகாது; செத்துப்போன ஒரு tமீஜ்t டை உருவாக்குகிறார்கள். இவர்கள் மீது எனக்கு மரியாதை கிடையாது. நான் போஸ்ட் மாடர்னிஸத்தை ஒரு tஷீஷீறீஆக, இந்த உலகத்தைப் பார்க்கும் ஒரு அணுகுமுறையாக எடுத்துக்கொள்கிறேன்.
தீராநதி: ஒரு tஷீஷீறீஆக போஸ்ட் மாடர்னிஸத்தைப் பயன்படுத்துகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் சிலர் ‘உங்களுக்கு போஸ்ட் மாடர்னிஸமே தெரியாது. சாரு படிக்காமல் உளறுகிறார்’ என்று சொல்கிறார்களே?
சாரு: நான் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று சொன்னால் பிறவி மேதை என்று ஆகிவிடும். போஸ்ட் மாடர்னிஸத்தைப் பற்றி ‘மாத்ரு பூமி’யில் ஒரு தொடர் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். அந்தத் தொடர் கட்டுரை பின்னால் புத்தகமாக வெளிவரும். இந்த மாதிரியான புத்தகங்கள் எழுதுவது ரொம்பவும் சுலபம். பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு 400 பக்க புத்தகம் எழுதுவது_இதைவிட சுலபமான வேலை வேறு எதுவும் கிடையாது.
ஆனால், இந்த 400 பக்கத்திற்குப் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்பட்டதுதான் ‘ராஸலீலா’. சொரணையுள்ள ஒரு சமூகத்தில் எழுதி வெளி வந்திருந்தால், என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள். அதன் வெளியீட்டாளர் மனுஷ்ய புத்திரனிடம் ‘இது வெளிவந்தால் நீங்களும், நானும் சேர்ந்து ஜெயிலுக்குப் போக வேண்டி வரும். தயாரா?’ என்று கேட்டேன். அவரும் ‘நான் தயார். ஆனால், கக்கூஸ் போவது மட்டும்தான் பிரச்னையாக இருக்கும்’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் அவரிடம் அந்த நாவலைக் கொடுத்தேன். இவ்வளவு சீரியஸாக இருக்கிறோம் நாங்கள். ஏன் தெரியுமா? 400 பக்கத்தில் பின்நவீனத்துவம் பற்றி ஒரு தியரி புத்தகம் எழுதுவது சுலபம் என்றேன். நாங்கள் ஃபூக்கோவைப் பற்றி இருபது முப்பது வருடமாக இங்கே ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ராஸலீலாவில் தண்டனை என்ற ஒரு வார்த்தை வருகிறதென்றால், உடனே ஃபூக்கோ தண்டனை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று மேற்கோள் காட்டி எழுதி இருப்பேன். ‘ஐ பியர்’ என்பதுதான் ஃபூக்கோவின் முதல் புத்தகம். 100 வருடங்களுக்கு முன்னால் பியர் என்பவன் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருப்பான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கும்போது ‘ஐ பியர்’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் அவனுடைய வாக்குமூலத்தைச் சொல்கிறான். அது அப்படியே கருவூலத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்த ஆவணத்திற்கு ஃபூக்கோ எடுத்துப் போட்டு அறுபது, எழுபது பக்கத்திற்கு முன்னுரை கொடுத்தார். இதுதான் அவரின் முதல் புத்தகம். இப்படி 50 புத்தகம், 100 புத்தகத்தைப் படித்துவிட்டு அப்படியே எடுத்து எடுத்து எடுத்து 400, 500 பக்கத்திற்கு பின் நவீனத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவது என்பது ரொம்பவும் சுலபம். அது ஒரு அகாடமி ஒர்க். ஆனால், நான் ‘ஐ பியரை’ படித்துதான், குற்றம் என்றால் என்ன? ஒரு குற்றவாளியை எப்படி அணுகுவது? சமூகத்தில் குற்றம் எப்படி ஏற்படுகிறது? எப்படி தண்டனை என்பது உருவாகுகிறது? என்பதையெல்லாம் புரிந்து கொண்டேன். நீங்கள் என்ன சொல்லுவீர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பீர்கள். மாதா, பிதா, என்பதையே தண்டனை சிஸ்டத்திற்குள் வைத்து ஃபூக்கோவைப் பார்க்கிறேன். ஏனென்றால், மாதாதான் உங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறாள். உதாரணத்துக்கு சாதி உணர்வை எடுத்துக் கொள்வோம். இதை உருவாக்குவது அன்னைதான். இதையெல்லாம் நான் தெரிந்து கொண்டது ‘ஃபூக்கோ’வைப் படித்து. எங்களுக்கு எங்கள் அம்மா கொடுக்கின்ற தாய்ப் பாலோடு சாதிய உணர்வு என்பது கலந்து இருக்கிறது. இதைவிட்டு நீ வெளியே வரவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தவன் ‘ஃபூக்கோ’. நான் ஃபூக்கோவைப் படிக்கவில்லை என்று சொன்னால், அப்போது என்ன அர்த்தம்? நானே ஒரு ஃபூக்கோ. நன்றாகத்தான் இருக்கிறது.
தீராநதி: உங்களின் ‘ராஸலீலா’ நாவல் கோணல் பக்கத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. வழக்கமான நாவல் வடிவத் தன்மையில்லாமல் அது வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்து சரியா?
சாரு: இது ஒரு நல்ல அப்சர்வேஷன் என்றுதான் சொல்லவேண்டும். நான் ஒரு கட்டத்தில் மலையாளத்தில் மூன்று பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். ‘மாத்ரு பூமி’யில் இசை குறித்தான கட்டுரை. ‘ராஸலீலா’ ‘கலா கௌமுதியில்’. ‘மாத்யமம்’ என்ற இதழில் பொதுவான விஷயங்களைப் பற்றியும் அரபி இலக்கியம் பற்றியும் எழுதினேன். அந்த நேரத்தில் ஒரு கட்டுரையை எழுதி இதை ‘ராஸலீலா’வில் சேர்க்கலாமா? இல்லை மியூசிக் கட்டுரையில் சேர்க்கலாமா? என்பதை பிறகுதான் முடிவு செய்வேன். அப்போது அப்படி அப்படி இன்ன இன்னதில் தூக்கி கோர்ப்பேன். நான் எழுதுவதென்னவோ ஒரே விஷயம்தான். அதனால் இதில் ஒரு சௌகர்யம் கிடைத்தது.
மியூசிக் பற்றிய கட்டுரையில் பெரிய பிலாஸஃபர் ஒருவர் ‘பீ’’யைப் பற்றியும் மூத்திரத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருப்பதைப் பற்றி எழுதி இருந்தேன். இது ஒரு சமூகவியல் ஆய்வுக் கட்டுரை. சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஆங்கில இலக்கியத்தில் பலப்பல விஷயங்களை எடுத்துக்கொண்டு அந்த பிலாஸஃபர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.
அந்தக் காலத்தில் ராணிகள், அரசிளங்குமரிகள் எல்லாம் உப்பரிகையிலிருந்து நிலவைப் பார்த்து ரசித்ததைப்போல நிகழ்வுகள் வரும். விக்டோரியா காலத்தைச் சேர்ந்தவர்களின் உடைகளைப் பார்த்தால் கீழே அகண்டு இருக்கும். உள்ளாடை இறுக்கமாக ஓர் உறை போல இருக்கும். பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் நடக்கும் போது _ குறைந்தது ஒரு விருந்து நிகழ்ச்சி ஐந்து, ஆறு மணி நேரத்திற்கு மேலாக நடக்கும். அவர்கள் இயற்கை உபாதைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். அந்தப் பெரிய பெரிய உடைகளை கழற்றுவதற்கே குறைந்தது அரை மணி நேரம் பிடிக்கும். இது ஒரு பெரிய காரியம். உடனே ஆடைகளைக் களைந்துவிட்டு மலஜலம் கழிப்பதென்பது அந்த உடையில் சாத்தியமில்லை. அதனால்தான் அவர்கள் உப்பரிகையில் நின்று கொண்டு ஒன்றுக்கு அடித்திருக்கிறார்கள். நிலவையெல்லாம் ரசிக்கவில்லை என்று அவ்வாராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கிறார். இதை எப்படி அவர் கண்டுபிடித்தார்? வெறும் ஊகத்தினால் அல்ல; அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகை விளம்பரம் ஒன்றை வைத்து இதைக் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் பத்திரிகை விளம்பரம் என்ன சொல்கிறதென்றால், ஆடைக்குள்ளாகவே ஒரு டியூப்பை பொறுத்தி அதன் மூலம் நீங்கள் சிறுநீர் கழிக்கலாம் என்கிறது.
அந்த வசதிகளுடன் ஒரு புதிய ஸ்கர்ட் விற்பனைக்கு வந்திருக்கிறது என விளம்பரம் சொல்கிறது. உடனே அந்த ஆராய்ச்சியாளன் என்ன நினைக்கிறான்? அப்படியானால் அதற்கு முன் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கிறான். இப்படி விரியும் கட்டுரை அது. நான் இதைப் படிப்பதற்கு முன்னாலேயே இந்தியாவிலுள்ள முக்கால்வாசி அரண்மனைகளுக்கும் கோட்டைகளுக்கும் சென்று இருக்கிறேன். அங்கு பல் துலக்கும் இடம், உப்பரிகை, நீச்சல் குளம், குளியலறை எல்லாம் இருக்கும். ஆக்ரா கோட்டையில் மீன்காரன் ஒருவன் அரண்மனைக்குள்ளாகவே யமுனை நதியோடு மீன் கொண்டுவர ஒரு இடம் இருக்கிறது. ஓடிப்பிடித்து விளையாட, இசைக் கச்சேரிகள் நடத்த இப்படி பல இடங்கள் இருக்கிறது. ஆனால், எங்கும் கக்கூஸ் மட்டும் இல்லை. அரண்மனைக்குள் எவ்வளவு பெரிய ஜனக்கூட்டம். அவர்கள் எப்படி கக்கூஸ் போய் இருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. இப்படி நான் எழுதும் விஷயங்கள் எல்லாமே ஒன்றுதான். எழுதி முடித்த பிறகுதான் இதை நாவலில் சேர்க்கலாம், இதை கட்டுரையாகக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறேன்.
தீராநதி: போர்னோகிராஃபி வகையறா எழுத்துகளுக்கும் உங்களின் எழுத்திற்கும் என்ன வித்தியாசம்?
சாரு: அது உங்களுக்கே தெரியுமே?!
தீராநதி: வாசகனுக்கு விளக்கச் சொல்கிறேன்.
சாரு: ஃபோர்னோகிராஃபியில் இரண்டு வகைகள் இருக்கிறது. ஒன்று _ கமர்ஷியல் ஃபோர்னோ. அதைத்தான் இங்கு செக்ஸ் புத்தகங்கள் என்று சொல்லி போலீஸ் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறது. அதில் வெறும் வல்காரிட்டி மட்டுமே இருக்கும். எந்த ஃபோர்னோ கலாபூர்வமான அனுபவத்தைக் கொடுக்கிறதோ, அது கிரியேடிவ் ஃபோர்னோகிராஃபி. நான் எழுதுவது கிரியேடிவ் ஃபோர்னோ கிராஃபி கூட கிடையாது.
அலினா ரேயிஸ் என்று ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர் இருக்கிறார். கேத்தி ஆக்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கேத்தியின் ஃபோர்னோவில் ஆன்மீகமும் உண்டு. அதனால் கேத்தியை முழுக்க முழுக்க போர்னோ எழுத்தில் அடைக்க முடியாது ‘புஸ்ஸி’ என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார் கேத்தி. அது போர்னோ வகையைச் சேர்ந்தது. அலினா ரேயிஸ் எழுத்து ஃபோர்னோ வகையைச் சார்ந்தது. இது எல்லாமே ஆர்ட்டிஸ்டிக் ஃபோர்னோவைச் சார்ந்தது. நான் எழுதுவது ஃபோர்னோ வகையையே சார்ந்தது. இல்லை என்று ஏன் சொல்கிறேன் என்றால், என் 700 பக்க நாவலில் 50 பக்கம் மட்டுமே போர்னோ கிராஃபி இருக்கும். ஒரு 1000 சதுர அடி வீட்டில் 100 சதுர அடி அளவுக்கு பெட்ரூம் இருப்பதுபோல்தான் அது. சொல்லப்போனால் ஃபோர்னோவுக்குள் நான் இன்னும் போகவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
தீராநதி: ‘செக்ஸைப் பற்றிய பொதுவான மதிப்பீடுகளைத் தாண்டி ஆழ்மன ஏக்கம் என்ற ஒன்றிற்குள் சென்று பிணாத்திக் கொண்டிருக்கிறார் சாரு.’ _ இப்படி ஷோபாசக்தி ஒருமுறை குறிப்பிட்டார். இது ஆழ்மன நிம்மதியின்மையால் எழுகின்ற பிரச்னையா சாரு?
சாரு: பெரிய செக்ஸ§வல் சர்வே ஒன்றை எடுத்தால்தான் இதற்கு பதில் தெரியும். அப்புறம் ஒருவனின் செக்ஸ் அனுபவம் என்பது இன்னொருவனுக்கு பொய்யாகவும், புனைவாகவும்தான் தெரியும். தன்னுடைய செக்ஸ§வல் பார்ட்னர், அதாவது மனைவியின் முழு நிர்வாணத்தைப் பார்த்த இந்தியர்களே இங்கு கம்மி. பெர்லினில் ஒரு இடம் இருக்கிறது. பத்து இருபது பெண்கள் எப்போதும் நிர்வாணமாக அங்கே இருப்பார்கள். அங்கு ஒரு நீச்சல் குளம். நீங்கள் விரும்பினால் அப்பெண்களுடன் குளத்தில் ஜலக்கிரீடை செய்யலாம். இதை நான் எழுதினால் ‘இது மாதிரியெல்லாம் எங்கேயுமே இல்லை’ என்பார்கள். அப்படிச் சொன்னால் ‘போடா பொக்கா’ என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். என்னிடமே ஒருமுறை ஷோபா சக்தி நேரிலேயே சொன்னார். ‘ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் உறவு என்பது நீங்கள் சொல்வது போலெல்லாம் இருக்காது’ என்றார்.
என் நண்பர் மனுஷ்ய புத்திரன் அடிக்கடி கூறுவார்; ‘எவனொருவன் ஒரு கலைப் படைப்பை அணுகும்போது அது உண்மையா, பொய்யா?’ என்று கேள்வி கேட்கிறானோ அவனோடு எனக்கு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை’ என்று. நான் ஒரு கலைஞன். நான் பொய்யை எழுதுவேன்; உண்மையை எழுதுவேன். எதை வேண்டுமானாலும் எழுதுவேன். கலைஞன் என்பவன் உலக மக்களின் சுபிட்சத்திற்காக தன் சட்டைப் பையில் பல உண்மைகளை வைத்து விநியோகித்துக் கொண்டிருப்பவன் அல்ல, உண்மையைச் சொல்வது என் வேலை அல்ல. அதற்குப் பல தீர்க்கதரிசிகளும் உபதேசிகளும் இருக்கிறார்கள்.
மேலும் செக்ஸ் என்பது கடலைப் போன்றது. இந்தப் பூமியில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான செக்ஸ் இருக்கிறது. ‘‘நான் எழுதுவது போன்ற செக்ஸ் இல்லை; அது ஃபாண்டஸி’’ என்று கூறுவது மிகவும் பத்தாம்பசலித்தனமானது. ஃப்ரான்ஸில் வசித்தாலும் பத்தாம் பசலிகளுக்கு விடிவே இல்லை என்பதையே ஷோபா சக்தியின் கூற்று நிரூபிக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், இந்தியாவில் தீவிர இடது சாரியாக உள்ளவரும் மதவாதிகளின் மொழியிலேயே பேசுவதும் சிந்திப்பதும்தான். ஷோபா சக்தியின் மேற்கண்ட கூற்று இங்கே இந்துத்துவவாதிகள் செக்ஸ் பற்றி கொண்டுள்ள அதே பழைய கருத்தையே பிரதிபலிக்கிறது.
சரி, ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலில் ஒரு அப்பனுக்கும் மகளுக்கும் இடையிலான பாலுறவு மிக விஸ்தாரமாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இம்மாதிரி வீஸீநீமீst உறவுகள் சரீர வேட்கையின் காரணமாகவே நடப்பவை. ஆனால் ‘ம்’ மில் அது ஒரு ‘காதலாக’ சொல்லப்படுகிறது. ஆக, உலகத்தில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? இதன் மூலம் திருவாளர் ஷோபா சக்தி கூறும் ‘உண்மை’ என்ன?
மேலும் ஒன்று, நான் ஒரு கீஷீனீணீஸீவீsமீக்ஷீ என்ற வகையில் எனக்கு பெண்களைப் பற்றியும், காமத்தைப் பற்றியும், போகத்தைப் பற்றியும் சற்றே அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‘உள்ளே’ போகப் போகத்தான் ‘கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு’ என்பது தெரிய வருகிறது. எனவே ஷோபா சக்தி போன்றவர்கள் இவ்விஷயத்தில் அடக்கம் காட்டுவது நல்லது.
தீராநதி: உங்களின் ‘நேநோ’ சிறுகதைத் தொகுதி தமிழ் நான்_லீனியர் ரைட்டிங் ஸ்டைலுக்குக் கிடைத்த நல்ல தொகுதி. ஏன் நீங்கள் சிறுகதைப் பரப்பில் தொடர்ந்து இயங்கவில்லை?
சாரு: அது ஒரு காலகட்டம். அவ்வளவுதான். ‘நேநோ’வில் வராத சில கதைகள் என்னிடம் இருக்கிறது. ‘கர்நாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்’ என்ற கதை ரொம்பவும் முக்கியமான சிறுகதை. இந்தக் கதையை வெளியிடுவதற்குக் கூட வழி கிடையாது. அது எந்தப் பத்திரிகையிலும் வெளிவரவேயில்லை. எனக்காக நாகார்ஜுனனே போய் டைப் பண்ணி, புத்தகமாகத்தான் வெளிவந்தது. அதேபோல் நாடகம்...
‘ரெண்டாம் ஆட்டம்’ என்று மதுரையில் ஒரு நாடகம் போட்டோம். நான்தான் அதை கன்சீவ் பண்ணேன். நம் நண்பர்கள் எல்லாம் நடித்தார்கள். நானும் நடித்தேன். எல்லோரையும் அடித்து தூக்கிப் போட்டு மிதித்தவர்கள் எல்லாம் பொதுமக்கள் கிடையாது. நாடகத்தில் பிஹெச்டி வாங்கியவர்கள், சக நாடகக் கலைஞர்கள். சண்டையை விலக்கியவர் மு. ராமசாமி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், சண்டையை மிகத் தீவிரமாக மூட்டிவிட்டவர் அ. மங்கைதான். ‘அடிங்கடா அவனை’ என்ற வார்த்தைகள் இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இந்த நாடகம் சம்பந்தமாக நான் 500 பக்கம் உள்ள புத்தகத்தை அகஸ்தோ போவாலைப் பற்றி ‘ஃபாரம் தியேட்டர்’ என்று ‘வெளி’ பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறேன். இப்படி அடித்தவுடன் அதற்குப் பிறகு நாடகத்தையே விட்டு விட்டோம்.
தொடர்ந்து நீங்கள் செயல் வீரனாக இருக்க வேண்டுமென்றால் அடிவாங்க வேண்டும். நீங்கள் பெரிய ‘கொரில்லா’ மாதிரி இருக்க வேண்டும். அந்த அளவுக்கெல்லாம் சமூகத்தில் நமக்கு இடமே கிடையாது.
தீராநதி: பொது மக்களைவிட எழுத்தாளனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் சக படைப்பாளிகளாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?
சாரு: ஆமாம். நிச்சயமாக கோடிட்டு உறுதியாகச் சொல்கிறேன். பொதுமக்கள் எப்போதும் பாதுகாப்பான ஆட்கள். பொது மக்களிடம் சென்று நீங்கள் நாடகம் போடலாம். அவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது. சக படைப்பாளிகள்தான் ஜனநாயக உணர்வே இல்லாத ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய காம்ரேட் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்.
தீராநதி: ஜனநாயகத்தைக் கோரியும், மனித உரிமைகளின் அடி ஆழம் வரை சென்றும் விவாதிக்கும் படைப்பாளிகள் பொதுமக்களைவிட வன்முறையாகச் செயல்படுகிறார்களே, ஏன்?
சாரு: அது எனக்குத் தெரியவில்லை. யார் அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி படிக்கிறானோ, அவனே பாசிஸ்ட்டாகி விடுகிறான். ‘ஒருவிதமான ‘ஐரனி’ தான் இது. அல்லது விதி. கம்யூனிஸம் என்பது மிகப்பெரிய ஜனநாயகக் கோட்பாடு. எல்லா மனிதனும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் உயரிய சித்தாந்தம். ஆனால் அது எப்படி பாசிஸமாக மாறியது? உதாரணம்; மாவோ. இது ஏதோ கம்யூனிஸத்தில் மட்டும் நடக்கவில்லை. ஆன்மிகத்திலும் நடக்கிறது. ஆன்மிகவாதி என்ன சொல்கிறான். ‘நான் சொல்வது மக்களுக்காக. நான் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம்’ என்று அவன் நினைப்பதனாலேயே அதை மற்றவர் மீது திணிக்கப் பார்க்கிறான். இப்படி அதீத ஜனநாயகம் பேசுபவன் சர்வாதிகாரியாகவும், அதீத ஆன்மிகம் பேசுபவன் பாசிஸ்ட்டாகவும் ஆவதெல்லாம் இந்த உள் முரண்களால்தான். இதற்கு நேர்வாழ்க்கையில் உங்களுக்குத் தெரிந்த பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால், அது அநாவசியம், வேண்டாம்.
தீராநதி: இளையராஜாவின் இசையை விமர்சித்து கோணல்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள்?’ உங்களின் இசை ரசனை பற்றி விளக்கமுடியுமா?
சாரு: ‘ஆல் இண்டியா ரேடியோவின் சங்கீத்’ சம்மேளன் மூலமாக ரவிசங்கரின் இசைக் கச்சேரிகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து என் இசைத் தேடல் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னாலேயே எங்கள் ஊர் பள்ளி வாசல்களில் கேட்கும் ‘நகரா’ இசை மூலம் என் இசை ரசனையைப் பெருக்கிக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், இலக்கியத்தைவிட எனக்கு இசையின் மேலும் சினிமாவின் மேலும்தான் ஆர்வம் அதிகம். சினிமா சம்பந்தமாக நான் நிறைய எழுதி இருப்பதால் அச்சந்தேகம் யாருக்கும் எழவில்லை. இசை பற்றி நான் அதிகம் எழுதாதது கூட அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். 25 வருடங்களுக்கு முன்னால் ‘மீட்சி’ இதழில் ‘சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்’ என்ற எஸ்.ராமநாதன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் உள்ள இணைத்தன்மைகள் பற்றி ஒரு ஒப்பீட்டுக் கட்டுரை எழுதி இருக்கிறேன். ‘ஷங்கர்லால் இசைவிழா’ என்று கணையாழியில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். அதைப் பாராட்டி அப்போது அசோகமித்திரன் கூட ஒரு கடிதம் போட்டார். நான் டில்லியில் இருந்தபோது பல இசைக் கலைஞர்களின் கச்சேரியை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இசை என்றால் அவர்களின் வரம்பிற்குள் கர்நாடக இசையும் இந்துஸ்தானியும்தான் இருக்கிறது. இசை என்பது உலகம் பூராகவும் இருக்கின்ற ஒன்று. இவற்றையெல்லாம் இசையென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களுடைய செவியும் அறிவும் உணர்வும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனை இல்லாதவர்களெல்லாம் இசை ரசனையே இல்லாதவர்கள் என்றுதான் சொல்வேன்.
இளையராஜாவை விட யுவன் ஷங்கர்ராஜா பல மடங்கு இசை ரசனையுள்ளவர். ‘புதுப்பேட்டை’யில் அவர் கொடுத்திருக்கும் இசை பெரிய சிம்பொனி மாதிரி இருக்கிறது. மேற்கத்திய இசையில் ரொம்பவும் ஆழமான ரசனை உள்ளவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதே போல ஏ.ஆர்.ரஹ்மான் ‘குரு’ படத்திற்குப் போட்டிருப்பதும் உயர்தரமான இசை என்று சொல்ல முடியும். நான் எழுதிய இசைக் கட்டுரைகள் ‘கலகம் காதல் இசை’ என்று தொகுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு புத்தகமாக வந்திருக்கிறது. இதுதான் எனக்கும் இசைக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் சான்று. இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கும் மேலாகச் சென்று இசையில் சாதனை செய்தவர்கள் சுமாராக பதினைந்து பேரையும் மறந்துவிட்டு, மறுத்துவிட்டு இவர் இருப்பது நன்றி கெட்டதனம். ஒருவன் தன்னை இசைஞானி என்று கூப்பிட்டால், எனக்கு முன்னால் பதினைந்து ஞானிகள் இருந்திருக்கிறார்கள் என்று தன்னடக்கத்துடன் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
இளையராஜா கொடுக்கின்ற பேட்டிகளில் எல்லாம் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் அவரை விமர்சிக்க வேண்டி இருக்கிறது. ‘பாப் மார்லி’யை குப்பை என்கிறார். கத்தாரை குப்பை என்கிறார். ஆந்திராவில் சென்று கத்தாரை குப்பையென்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
தீராநதி: யுவன் ஷங்கர் ராஜாவின் இசை குறித்து பேசியதால் கேட்கிறேன். இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது அதில் ஒரு மன அமைதியின்மை நிலவுகிறது. அதே யுவன் ஷங்கர்ராஜாவின் இசையைக் கேட்டால் ஒரு விளிம்பு நிலை கலாச்சாரத் தன்மையுடன் கூடிய ஒரு கொண்டாட்டம் பீறிடுகிறது. இது சரியான ஒப்பீடா?
சாரு: யுவனைப் பொறுத்த அளவில் நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இளையராஜாவின் இசையில் நீங்கள் சொல்வது போன்ற ஒரு குணாம்சம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை நான் உணர்ந்திருந்தால் அவரைக் கொண்டாடி இருப்பேன். எனக்கு அவரிடம் அப்படி ஒரு குணாம்சமே இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதற்குக் காரணம் _ என் எரிச்சல் சார்ந்ததாகக்கூட இருக்கலாம். அவர் செய்கின்ற பல ‘லந்து’களால் என் புலனுணர்வுக்கு அது எட்டாமலேகூட போய் இருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அனுமானம் சரியாக இருந்தால், அதற்கு அவரின் ஆன்மிகத் தேடல் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்மிகத் தேடல் இருந்தாலே அது ஒருவித அமைதியையும், அமைதியின்மையையும் ஒருங்கே ஏற்படுத்திவிடும்.
தீராநதி: உங்களுடைய எழுத்துகளில் சொல்லத்தகுந்த அறமாய் ஒரு மெலிதான திராவிட அரசியல் தன்மை இழையிடுவதாகத் தெரிகிறது. அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயும் இருக்கிறது. திராவிட அரசியலின் தொடர்ச்சியில் வரும் ஒரு எழுத்தாளனாக உங்களை நீங்கள் உணருகிறீர்களா?
சாரு: இதற்கு முன்னால் அப்படி இருந்த ஒரு எழுத்தாளரை உங்களால் சொல்ல முடியுமா?
தீராநதி: நிறைய இருக்கிறார்கள். குறிப்பாக பிரமிள்?
சாரு: இவ்வளவு அப்ஜெக்டிவ்வாக நான் இதுவரை யோசித்ததில்லை. ஆனால், எனக்கும் திராவிட அரசியலுக்குமான ஒரு தொடர்பு முப்பது வருடமாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. இல்லை என்றால் கருணாநிதிக்கு ஒரு கடிதம் என்னால் எழுதியிருக்க முடியாது. திராவிட இயக்கத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வைத்தே ஒரு நாவல் எழுதும் எண்ணம் எனக்கிருக்கிறது. அதை ஏன் யாரும் செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. உலக அளவில் இப்படி எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட ஓர் இயக்கமாக சீலேவில் பெரோன் மூமெண்ட்டை மட்டுமே சொல்லலாம். அதற்கடுத்தது திராவிட இயக்கம்.
வேறு எங்கேயும் இப்படிப்பட்ட தீவிரமான ஒரு வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே ஒரு வீழ்ச்சி இவ்வளவு டிராமாடிக்காக நடந்ததில்லை. சிவாஜி கணேசனும் கருணாநிதியும் ஒரே மேடையில் கட்டித் தழுவிக் கொண்ட காட்சியை உங்களால் மறக்கமுடியுமா? எப்படிப்பட்ட நாடகத் தன்மை கொண்ட காட்சி அது! இவற்றையெல்லாம் தொடர்ந்து மனதில் நான் பதிவு செய்து கொண்டே இருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அத்தன்மை என்னிடமும் இருக்கத்தான் செய்யும்.
நன்றி - குமுதம் தீராநதி
டெஸ்டிங்கிற்காக ஒரு மீள்பதிவு.
Tuesday, May 13, 2008 | Labels: காப்பி-பேஸ்ட் | 12 Comments
தமிழ்மணம், Open source, கட்டற்ற சுதந்திரம், ரவிசங்கருக்கு இன்னொரு பதில்
ரவிசங்கர், Open source என்ற விஷயத்தை எந்த கட்டுக்குள் நீங்கள் அடைக்கப் பார்க்கிறீர்கள் எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை Open source என்பது ஒரு மனநிலை என்றே வைத்திருக்கிறேன், இன்னும் அழகான தமிழ் வார்த்தைகளில் கட்டற்ற சுதந்திரம்.
பின்னூட்ட மட்டுறுத்தலும், பதிவிற்கு பின்னூட்டங்களையே வெளிவிடாமல் இருப்பது, இரண்டு மூன்று பின்னூட்டங்களை வெளிவிட்டுவிட்டு பிறகு பெட்டியை பூட்டி வைத்துக் கொள்வதும் கட்டற்ற சுதந்திரத்திற்குள் வராது. அதைத்தான் சொல்லியிருந்தேன்.
அதே போல் தான் ஓடையைச் சுருக்குவதை "வலைப்பதிவு இயங்கியலையே குலைக்கும்" என்று politically correct ஆ சொல்லிட்டீங்க, நான் ஓடையைச் சுருக்குவது கட்டற்ற சுதந்திரத்தை பாதிக்கும் என்று கருதியே Open sourceற்கு பாதிப்பு வருமா என்று கேட்டேன்.
//இந்தப் பிரச்சினையை ரவிசங்கர் சொல்கிறார், OPML திட்டம், தனிநபர் பிரச்சினை என்பது தவிர்த்து,//
முடியாது ரவிசங்கர் - ஜார்ஜ் புஷ், இன்னொரு நாட்டிடம் நீ அவன் கூட சண்டை போடக்கூடாது என்று சொன்னால் எப்படிப் பொருளாகாதோ அதேபோல் யார் எந்த விஷயத்தைச் சொல்கிறார்கள் என்று பார்த்துத்தான் ஆகவேண்டும்.
இன்னமும் பேச ஆசை தான் என்றாலும், இப்படி அடித்துக் கொள்வதற்கு, குலோத்துங்க சோழனைப் பற்றியோ, புதுக்கோட்டை பற்றியோ எழுதிட்டுப் போய்டலாம் என்று நினைப்பதால். வர்றேன்.
Tuesday, May 06, 2008 | Labels: டைம் கிடைச்சா மாத்தணும் | 1 Comments
ரவிசங்கருக்கு ஒரு பின்னூட்டம்
Open source பற்றி பேசுகிற ரவிசங்கர், பதிவிற்கான கமெண்ட்களை முடக்கி விட்டதால் அவருக்கு போட இருந்த பின்னூட்டம் பதிவாக.
//OPML தொகுக்கவோ, பதிவுகளைத் திரட்டவோ எவரது அனுமதியும் தேவை இல்லை என்பதே எனது இப்போதைய நிலைப்பாடும். இந்தச் செயற்பாடுகளால் பதிவரின் பதிவுக்கு வருகை கூடுமே தவிர ஒரு போதும் குறையவே குறையாது.//
கூகுள் ரீடரிலேயே படிச்சிட்டுப் போறவங்களால பதிவுக்கு வருகை எப்படிக் கூடும் புரியலையே!
//பயன்படுத்தும் திரட்டிகள் ஒரு சில வரிகள் மட்டும் காட்டுதல் நலம் என்று குறிப்பிடப்பட்டே OPML வெளியிடப்பட்டுள்ளது. //
எனக்கும் நினைவிருக்கு, ஆனால் mandatory கிடையாதுன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் உங்கக்கிட்டேர்ந்து எடுத்துட்டு உங்ககிட்டேர்ந்து எடுக்கலை நானா சேர்த்தேன்னு சொல்லி முழுசா போட்டா?
//அது பதிவர்களுக்கு நன்மையா இழப்பா?//
பதிவர்களுக்கு இழப்புன்னு நினைச்சா "ஓடையை" சுருக்கிக்கிட்டு போய்டுவாங்க, open sourceக்குப் பிரச்சனைன்னு சொல்லுங்க சரியா!
//தனி நபர் பிரச்சினையைப் பொதுவில் தெரிவிக்க வேண்டாம் என்ற உங்கள் மேலான அறிவுரைக்கு நன்றி. இது தமிழ்மணத்தில் இணைந்துள்ள 2900+ பேர், இணையாத இன்னும் பலருக்கான பொதுப் பிரச்சினை.//
புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். நான் முழுசா காண்பிக்கிறதைப் பத்தி சொன்னது இல்லை அது, கேளிர் திரட்டி பற்றியும், தமிழ்மணத்தில் நீங்களா சேராமாமல் கேளிர் திரட்டி மூலமாய் உங்களை இணைத்துக் கொண்டு அதை பொதுவில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்னு நீங்க சொன்னதைத்தான்.
அதைத்தான் இப்படி "தானா இணையாமல் கேளீர் திரட்டி" மூலமா திரட்டுரதைப் பத்தி சொன்னதையே 'குறிக்கிக் கொள்ளாமல்' பொதுவாய்ப் பேசலாம் என்று சொன்னேன்.
இதைத்தான் தனிநபர் பிரச்சனை என்று சொன்னேன், அதாவது(இன்னொரு முறை) நீங்கள் தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் கேளிர் திரட்டி மூலமா உங்கள் பதிவு திரட்டப்படுவதையும் அதையும் முழுசா காண்பிப்பதில் பிரச்சனையிருந்தா 'கருத்து' சொல்லாமல் தமிழ்மணத்தில் இருந்து விலகியிருக்கலாமேன்னு கேட்டேன்.
---
நன்றி
Monday, May 05, 2008 | | 7 Comments
இரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி
முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிடுறேன் கிருமி கண்ட சோழன் என்று ஒரு சோழன் குறிப்பிடப்படுவது வரலாற்று ஆதாரம் கிடையாது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் 'கதை'களிலும் சொல்லப்படுவது, சொல்லப்போனால் எப்படி 'கடவுளுக்கும்' அறிவியலுக்கும் எப்படி ஆகாதோ அப்படியே இந்த வகையறா 'கதைகளுக்கும்' வரலாற்றிற்கும் ஆகாது.
கல்கி பொன்னியின் செல்வனில், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்ற கற்பனைக் கதாப்பாத்திரங்களைத் தவிர்த்தும், ஆதித்த கரிகாலன் விஷயத்தில் ஏகப்பட்ட கற்பனைகளைக் கலந்துகட்டி சோழர் வரலாற்றைக் கவிழ்த்திருந்தார் என்பதைச் சொல்லி அலுத்துவிட்டது. ஒவ்வொரு முறையும் கல்கியின் தீவிர ஆதரவாளர்கள் வந்து அவர்களுக்கு கல்கியை மதிக்கிறேன் அதற்காக அவர் எழுதிய வரலாற்றுத் தவறுகளை சுட்டாமல் விடமுடியாது என்று டிஸ்க்ளெய்ம்பர் போட்டும் கை வலிக்கிறது.
சரி மேட்டருக்கு, கிருமி கண்ட சோழன் என்று 'மேற்சொன்ன கதைகள்' உள்ளிட்டு எதுவும் எந்தச் சோழனையும் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஒட்டக்கூத்தரின் 'குலோத்துங்கச் சோழன் உலா' வரி 76 - 78, இன்னும் தெளிவாக உள்ள 'இராஜராஜ சோழன்(இது முதலாம் இராஜராஜ சோழன் இல்லை) உலா' வரி 64 - 66, தக்கையாகப் பரணி செய்யுள் 777 என்று வந்தாலும் இவைகள் அனைத்தும் மிகவும் குறிப்பிட்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று கூறுவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த 'கிருமி கொண்ட சோழன்' முதலாம் குலோத்துங்க சோழன் தான் என்றே நிறைய பிற்காலக் கதைகள்(கோயிலொழுகு முதலியன) சொல்கின்றன. Life of Ramanuja என்ற எஸ்.கே. அய்யங்காரின் புத்தகம் குறிப்பிடுவதும் முதலாம் குலோத்துங்க சோழனையே. "சோழர் குடும்பம் அரசர்களாக இருந்து ஆட்சி செய்வது ஒழியட்டும்" என்று திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் பிரகடனம் செய்ததாக "திவ்யசூரி சரிதத்தில்" உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த "திவ்யசூரி சரிதமும்" "யதிராஜவைபவம்" உம் ராமானுஜர் வாழ்க்கையக் கூறும் பழைய நூல்கள்.
சாளுக்கிய சோழர்களை சோழர்களாக ஒப்புக்கொள்ளாமல் வைக்கும் பொழுது வரும் கடைசி சோழ மன்னர்களான வீர ராஜேந்திர சோழனையோ(இந்த மன்னன் இராஜகேசரி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டவன்) இல்லை அவனுக்குப் பின் வெகு சில காலம்(சொல்லப்போனால் சில வாரங்கள்) ஆண்ட ஆதி இராஜேந்திர சோழன் தான் இந்த 'கிருமி கண்ட சோழன்' என்றும் conspiracy theoryகள் உண்டு. ஆனால் என் வழி K.A. நீலகண்ட சாஸ்திரி வழி(தனியா வழியில் போக நானென்ன ரஜினிகாந்தா!) "எந்த ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகள் சொல்லும் விஷயங்களை நிலைநாட்டுவதற்கில்லை"(சோழர்கள் முதல் பாகம் - நீலகண்ட சாஸ்திரி - பக்கம் 404)
வரலாறோ மன்னருடைய கல்வெட்டுக்களோ இந்தக் காலத்தில் (985 - 1170) வாழ்ந்த மன்னன் கிருமி கடிச்சி(ஹிஹி) இறந்ததாகச் சொல்லவில்லை. சரி அப்படியே சைவ - வைணவர் பிரச்சனையில் 'வைரஸ்' தாக்கம் ஏற்பட்டு 'முதலாம் குலோத்துங்கனுக்கு பிற்பட்ட' காலத்தில் நடைபெற்ற பிரச்சனையில் சைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வைணவர்களை எதிர்த்து அதனால் சிவபெருமானே(!) சாபம் கொடுத்து கிருமி பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாகச் சொல்லவில்லை. ரொம்பவும் லாஜிக்கலா யோசிச்சா அந்த குறிப்பிட்ட மன்னன் 'முதலாம் இராஜராஜ சோழன்' போலவோ 'முதலாம் இராஜேந்திர சோழன்' போலவோ சைவ மன்னனாக இருந்து எல்லா சமயங்களையும்(சைவம் வைணவம் சமணம் பௌத்தம் முதலியன...) ஆதரிக்காமல், வைணவர்களை 'ஒரு காட்டு காட்டியதால்' கோபப்பட்டு புலம்பியதாகவே கொள்ள முடியும் 'கிருமி கண்ட சோழன்' என்ற பதத்தை.இதற்கும் வரலாற்றிற்கும் சம்மந்தம் இல்லை
கமலஹாசன், வைணவர்களை ஆதரித்து சைவர்களை எதிர்ப்பதற்காக 'இராமானுஜ நம்பி' என்ற பெயரில் பாவம் அவர் நாத்தீகரா இருந்தும் முயல்வதாக நிருவ முயல்வதெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதே போல் அந்தக் காலத்தில் இருந்ததைப் போல் வைணவ-சைவ பிரச்சனை இப்பொழுது இல்லை என்று நம்ப வைக்க முயல்வதும். ஈஸ்வரோ ரக்ஷத் 'ஆண்டவன்' தான் உங்களை எல்லாம் காப்பாற்றணும். படம் 'ஹே ராமை'ப் போல கமர்ஷியல் பக்வாஸாக இல்லாமல் இருக்க எப்படி கே.எஸ்.ஆரின் உதவியை நம்பியிருக்கேனோ அதைப் போல் கமலஹாசன் படமாம 'ஹே ராம்' ஆக கமர்ஷியல் பக்வாஸாகி தேர்ந்த படமாக இருக்க வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.(இரண்டும் சரியா அமைஞ்சா என்னை விட சந்தோஷப்படப் போறது கமலஹாசனாத்தான் இருக்கும்!)
சைவ - வைணவ சண்டையை வலை உலகிற்கு எடுத்துட்டு வராதீங்க என்றெல்லாம் அறிவுரை வழங்கவில்லை விருப்பமுமில்லை சொல்லப்போனால் இப்படிச் சண்டைப் போட்டா கூத்தாடியா நான் தான் முதலில் நிற்பேன்.
இன்னும் விஷயம் தேவைப்பட்டால் - கிடைத்தால் வருகிறேன்.
அன்பு தோழர் ஃபெடரிக் நியீட்ஷேவைக் கொண்டு இதை முடித்து வைக்கிறேன்.
God is dead. God remains dead. And we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murderers? What was holiest and mightiest of all that the world has yet owned has bled to death under our knives: who will wipe this blood off us? What water is there for us to clean ourselves? What festivals of atonement, what sacred games shall we have to invent? Is not the greatness of this deed too great for us? Must we ourselves not become gods simply to appear worthy of it?
– Nietzsche, The Gay Science, Section 125, tr. Walter Kaufmann
(நியூட்டனைப்போல நியீட்ஷேவையும் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்று சொல்லிவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் :))
ஆதித்த கரிகாலன்
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
வீரராஜேந்திர சோழன்
ஆதி ராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
சோழர்கள்
Monday, May 05, 2008 | Labels: டைம் கிடைச்சா மாத்தணும் | 7 Comments