டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசியல் புகுந்து விட நான் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், நேற்று அப்துல் கலாமை செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் கலாம் மனம் விட்டுப் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
கலாமை மையமாக வைத்த பல அரசியல் விளையாட்டுக்கள் நடந்து விட்ட போதிலும் கூட, அதுகுறித்த தடுமாற்றும் ஏதும் இல்லாமல், வழக்கமான கலாமாக படு உற்சாகமாக பேசினார் அப்துல் கலாம்.
செய்தியாளர்களிடம் கலாம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஷ்டிரபதி பவனை மக்களின் பவனாக மாற்ற நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். எங்களின் உழைப்பால் இன்று ராஷ்டிரபதி பவன், மக்கள் பவனாக மாறியுள்ளது.
இது நாட்டுக்கே உதாரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இது சிதைக்கப்பட்டு விடக் கூடாது. அதனால்தான் ராஷ்டிரபதி பவனில் அரசியல் நுழைந்து விடக் கூடாது, அதற்கு நான் காரணமாக அமைந்து விடக் கூடாது, ராஷ்டிரபதி பவனின் மாண்பு கெட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. போதும், போதும் என்று கூறி விட்டேன்.
ஆண்டுதோறும் ராஷ்டிரபதி பவனுக்கு இன்று 5 முதல் 10 லட்சம் பேர் வரை வருகிறார்கள். அவர்களில் சாதாரணமானவர்களும் இருக்கிறார்கள், மிகப் பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவராக அடுத்து வருகிறவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரால்தான் இந்த மாளிகைக்குப் பெருமை சேர்க்க முடியும்.
அடுத்த குடியரசுத் தலைவராக யார் வந்தாலும், அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர் நிச்சயம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.
எனக்கு முன்பு இருந்த அனைத்து குடியரசுத் தலைவர்களையும் நான் பார்த்துள்ளேன். ஒருவர் ஆசிரியர் என்றால் இன்னொருவர் தத்துவஞானியாக இருந்தார். மற்றொருவர் சிறந்த அரசியல் தலைவராக இருந்தார். இன்னொருவரோ நீதித்துறையில் சிறந்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒரு துறையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.
அதுபோலவே அடுத்து வரும் குடியரசுத் தலைவரும் திறமை மிக்கவராக இருப்பார் என்று நம்புகிறேன்.
இரண்டு பிரதமர்களிடம் பணியாற்றியுள்ளேன். ஒருவர் முடிவு எடுப்பதில் திறமையானவர், இன்னொருவர் நிபுணத்துவம் பெற்றவர். சில நேரங்களில் இவர் முடிவு எடுப்பதில் திறமையானவராக இருக்கிறார். அவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். இது அற்புதமானது.
நான் கையெழுத்திட்ட மசோதாக்களிலேயே மிகவும் கடினமானது, ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாதான். அதை நான் முதலில் திருப்பி அனுப்பினேன். அது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதேபோல பயோடீசல் தொடர்பான மசோதா.
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு விஞ்ஞானியாக அரசியல்வாதிகளுடன் பழகினேன். பின்னர் குடியரசுத் தலைவர் என்ற முறையில் பழகினேன். நது நாட்டில் இரண்டு வகையான அரசியல் உள்ளது. ஒன்று அரசியல் ரீதியிலான அரசியல், இன்னொன்று வளர்ச்சி ரீதியிலான அரசியல்.
அரசியல் ரீதியான அரசியல் 30 சதவீதமாகவும், வளர்ச்சி ரீதியிலான அரசியல் 70 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுப்பேன். எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வேன் என்றார் கலாம்.
Credits - Thatstamil.com
அங்க நிற்கிறார் கலாம்
Monday, June 25, 2007
|
Labels:
காப்பி-பேஸ்ட்,
செய்திகள்
|
This entry was posted on Monday, June 25, 2007
and is filed under
காப்பி-பேஸ்ட்
,
செய்திகள்
.
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
þ¨Ç»÷¸û ÁüÚõ ÌÆ󨾸û ±ýÚ þó¾¢Â¡Å¢ý «Îò¾ ¾¨ÄӨȢɨÃ
¾ò¾õ ШÈ¢ø º¢ÈôÒ¼Ûõ ÐÊôÒ¼Ûõ À½¢Â¡üÈ Ò¾¢Â ¯ò§Å¸õ ¦¸¡ÎòÐ
¦ÅÚõ «Äí¸¡ÃôÀ¾Å¢ ±ýÚ ¸Õ¾ôÀ𼠃ɡ¾¢À¾¢ À¾Å¢Â¢ø þÕóÐõ ¿¡ðÎìÌ
¿øÄÐ ¦ºöÂÓÊÔõ ±ýÚ ¿¢åÀ¢ò¾ ¸Ä¡Á¢üÌ ±ÉÐ º¢Ãó¾¡úó¾ ºÄ¡õ.
«Îò¾ ƒÉ¡¾¢À¾¢ ¸¡ðÊ þ¼ò¾¢ø ¨¸¦Â¡ôÀÁ¢Îõ ¨¸ôÀ¡¨Å¡¸ Á¡ò¾¢Ãõ þÕì¸ìܼ¡Ð
±ýÚ ¦º¡øÄ¡Áø ¦ºÂÄ¡ø ¸¡ðÊÔûÇ¡÷. «¾¢¸¡Ãõ þøÄ¡Å¢ð¼¡ø ±ýÉ? À¾Å¢Â¢ý ãÄõ
ÀÄ ¿øÄ Å¢„Âí¸¨Ç þ¨Ç»÷¸ÙìÌ ¦º¡øÄ¢ ÅÆ¢ ¿¼ò¾¢î¦ºøÄÓÊÔõ ±ý¸¢È ÅƢ¢¨É측ðÊÔûÇ¡÷ ¸Ä¡õ.
«ÎòÐ ÅÕÀÅÕõ þ¨¾ ¯½÷óÐ ¦ºÂøÀÎÅ¡÷ ±ýÚ ¿õҧšÁ¡¸.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என்று இந்தியாவின் அடுத்த தலைமுறையினரை
தத்தம் துறையில் சிறப்புடனும் துடிப்புடனும் பணியாற்ற புதிய உத்வேகம் கொடுத்து
வெறும் அலங்காரப்பதவி என்று கருதப்பட்ட ஜனாதிபதி பதவியில் இருந்தும் நாட்டுக்கு
நல்லது செய்யமுடியும் என்று நிரூபித்த கலாமிற்கு எனது சிரந்தாழ்ந்த சலாம்.
அடுத்த ஜனாதிபதி காட்டிய இடத்தில் கையப்பமிடும் கைப்பாவையாக மாத்திரம் இருக்கக்கூடாது
என்று சொல்லாமல் செயலால் காட்டியுள்ளார். அதிகாரம் இல்லாவிட்டால் என்ன? பதவியின் மூலம்
பல நல்ல விஷயங்களை இளைஞர்களுக்கு சொல்லி வழி நடத்திச்செல்லமுடியும் என்கிற வழியினைக்காட்டியுள்ளார் கலாம்.
அடுத்து வருபவரும் இதை உணர்ந்து செயல்படுவார் என்று நம்புவோமாக.
மேற்கண்ட டிஸ்கி பின்னூட்டம் யுனித்தமிழில்.
Post a Comment