பல்தெரிய சிரித்தபடி
எதிர்பாராத சந்திப்புக்களில் காத்திருக்கிறது
என்றோ ஒரு நாள்
கழற்றி எறிந்த முகமூடிகள்
கடந்த காலத்தின்
முகமூடிகளோடு பொருந்தாமல்
நிகழ்கால முகமூடிகளுடனான
முகம் விகாரமாகிறது
குறிப்புக்களுடனேயே தொடரும்
பயணத்தில்
முகமூடிகளுடனான கால இடைவெளிகளை
மட்டும் நினைவில் நிறுத்தியபடி நான்
முகமூடி
Tuesday, July 31, 2007 | Labels: கவிதை | 4 Comments
மூன்று கால் முயல்
தாவிக்குதித்து ஓடியபடி
காலத்தை கால்களால்
முன்நகர்த்திக்கொண்டிருந்த முயலொன்றை
எத்தனை முறை பார்த்தாலும்
மூன்றே கால்கள்
நான்காம் காலின் மீதான நம்பிக்கைகள்
முகத்தில் அறைய
தேடிக்கொண்டேயிருந்தேன் நான்காவதை
தேடுதலின் நீளம் காலத்தின்
கால்களாய் நகர்ந்து கொண்டேயிருக்கிறது
தூரத்தில் புள்ளியாய்
எண்ணிக்கையை புறக்கணித்தவன்
Monday, July 30, 2007 | Labels: கவிதை | 3 Comments
Weekend ஜொள்ளு
ஏகப்பட்ட போட்டிகளுக்கிடையில் தொடங்கிவைத்தவன் என்ற முறையில் என் பதிவியைத் தக்கவைத்துக்கொள்ள வேற வழியில்லை என்ஜாய்.
Friday, July 27, 2007 | Labels: Megan Fox | 4 Comments
பெங்களூரில் இந்தியனாய் இருத்தல்
எதற்காக இங்க இந்தியன் என்ற டெர்ம் வருதுன்னா, தமிழன் என்ற டெர்மை போட முடியாத காரணத்தினால் தான். சுலபமா இந்தியனாவோ இல்லை தமிழனாவோ இல்லாமல் மனுஷனா இருந்துறேன் அப்படிங்கிற பதில் சொல்லிவிடமுடியும். ஆனால் உங்களைச் சில விஷயங்கள் முன்நிறுத்துகின்றன என்றால் அதில் மிகமுக்கியமானது உங்களின் மொழி. அப்படியிருக்க மொழி இல்லாமல் போய்விட்ட, நியூட்ரலாகிவிட்ட மனிதர்கள் இல்லவேயில்லை என்று சொல்லாவிட்டாலும் % குறைவாகயிருப்பது உண்மை.
சிலசமயம் என்னிடம் இந்தக் கேள்வி வைக்கப்பட்டிருக்கிறது, அலெஜாண்ட்ரோ கன்சாலஸ் இன்னாரித்தோ, பெரோ அல்மோடோவர் படம் பார்க்கும் உன்னால் எப்படி சிவாஜி நல்ல படமென்று சொல்ல முடிகிறது என்று. ஒன்று நான் அந்தப் படங்களை ரசித்துப் பார்ப்பது பொய்யாகயிருக்க வேண்டும் இல்லை சிவாஜி பற்றி சொல்வது பொய்யாகயிருக்க முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சிவாஜியை நோக்கி நான் நகர்த்தப் படுகிறேன் என்று தான் சொல்வேன். காந்த சக்தி ரஜினியிடம் இருக்கிறதா என்றால் இல்லை, சமுதாயம் நம்மை அப்படிச் செய்யச் சொல்லி நகர்த்துகிறது.
பெயரிலி சொல்லியிருப்பார் "not a weblog, but an optimized ego-engine" என்று உண்மைதான் பதிவுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்த பொழுது செய்திராத சில விஷயங்களை நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் செய்ய தள்ளப்பட்டிருக்கிறேன்.
முங்காருமலையையும் சிவாஜியையும் இங்கே கன்னடர்கள் ஒப்பிடும் பொழுது நீங்கள் அவர்களுக்கு முகத்துக்கெதிரில் சொல்லிவிடுவீர்களா வித்தியாசத்தை என்றால் உங்கள் மனம் இந்த Ego Engine போல் வருத்தப்படாது. ஆனால் அவர்கள் மனம் நோக வைக்கக்கூடாது என்று ஒரு எண்ணம் எப்பொழுதுமே ஓடிக் கொண்டிருப்பதால் அப்படி சொல்லமுடியவில்லை, பெரும்பாலும் வாய் மூடிக்கொண்டோ இல்லை வெட்டி சமாதானங்கள் சொல்லிக் கொண்டோயிருக்கும் பொழுது. எங்காவது ஒரு இடத்தில் இதை -பச்சையாக- சொல்ல முடியாவிட்டாலும், உள்ளுறை உவமையாக சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் சிவாஜி போஸ்டரை டெக்ஸ்டாப்பில் போடுவது, எப்பொழுதும் சிவாஜி பாட்டையே கேட்டுக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் என்று நினைக்கிறேன் நான்.
ஏன் இப்ப இந்தப் புலம்பல் என்று கேட்டால் இதுவரை KA ரெஜிஸ்ட்ரேஷன் வண்டெயொன்றைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். எந்த ஒரு சமயத்திலும் அந்த வண்டியை ஓட்டும் பொழுது தமிழ் பேசுவதில்லை; முடிந்தால் என்னுடைய ஆங்கில அக்சண்டில் இருந்தோ தவறான இந்தியில் இருந்தோ கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்றுதான். சிலசமயம் பக்வாஸான பிரச்சனை வரும் எப்படியென்றால் நான் ரொம்பத் தீவிரமாய் இந்தியில் பேசிக்கொணிடிருக்க அக்கா அந்த இடத்தில் தமிழில் பேசி என்னை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுவதுண்டு.
இப்ப பிரச்சனை என்னான்னா நான் TN போர்ட் வண்டி ஒன்றை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்திருந்தேன் எவ்வளவு நாள் தான் நானும் Scooty Pep ஓட்டுவேன் சொல்லுங்க ;-). அது வந்ததில் இருந்துதான் பிரச்சனையே; பழைய ஞாபகத்தில் வண்டி ஓட்டும் வழி கேட்கவோ இல்லை டிராபிக் போலிஸிடம் பேசவோ நான் இந்தியை உபயோகிக்க, என்னுடைய TN போர்ட் வண்டி அழகாய் அடையாளம் காட்டிவிடும் நான் தமிழனென்று அப்புறம் கேட்கவும் வேண்டுமா கர்நாடகாவில் பிரச்சனையை. சும்மாயிருந்தாலே பிரச்சனை நான் வேற பெரிய டுபுக்கு மாதிரி இந்தியில் பேச இரண்டு பங்காகிக் கொண்டிருந்தது பிரச்சனை.
இந்த விஷயத்தில் சைக்காலஜி கொஞ்சம் போல் எல்லோரிடமும் மாறுபடுகிறது; நான் TNபோர்ட் வண்டி ஓட்டினாலும் தமிழில் பேசாமல் இந்தியில் வழிகேட்டால் சிலர் ஒத்துக்கொள்கிறார்கள் ஆனால் சிலருக்கு நான் அவர்களை ஏமாற்றப் பார்க்கிறேன் என்று கோபம் வருகிறது :(.
சமீபத்திலேயே இரண்டு மூன்று இன்ஸிடெண்ட்ஸ், எப்படியென்றால் என்னிடம் தப்பில்லாவிட்டாலும் நான் TN வண்டி ஓட்டுவதாலேயே என்னைத் திட்டிவிட்டுப் போனவர்கள்; நின்று சண்டை போடப் பார்த்தார்கள் என்று. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் நான் விட்டுக்கொடுத்துத் தான் வந்து கொண்டிருக்கிறேன். பயந்தாங்கொள்ளித்தனம் என்றால் சரிதான் மறுக்கவில்லை என்ன கோபப்பட்டால் என்னவாகும் என்றுத் தெரிந்திருப்பதால் வேறொன்றும் செய்யமுடியவில்லை, ப்ளாக் எழுதுவதைத் தவிர.
புனேவில் இருக்கும் பொழுதே எழுதியிருக்கிறேன், பெங்களூரில் இருக்கும் பொழுது செக்யூர்ட்டா இருப்பதைப் போன்ற ஃபீலிங் எனக்கு வரவே வராது. இங்கே தமிழனாக இருப்பதைவிடவும் 'இந்தி'யனாக இருப்பதால் பிரச்சனை வராது என்றால் நான் அதைத்தான் நிச்சயமாய்த் தேர்ந்தெடுப்பேன்.
--------------------------
செப்புப்பட்டயம் உதைக்குது - புதுப்பதிவை ஒத்துக்க மாட்டேங்குது.
Friday, July 27, 2007 | Labels: இந்தி, சொந்தக்கதை | 18 Comments
கிரீடம் பெண்ணீய விமர்சனம்
ஒரு படத்தை இரண்டு தடவைப் பார்த்தாத்தான் இரண்டு தடவை விமர்சனம் எழுதலாம்னா எனக்கு அந்தத் தகுதியும் உண்டு. முன்னையே சொல்லியிருந்தது போல் ஞாயிற்றுக் கிழமைக்கு புக் செய்திருந்த டிக்கெட்களை வேஸ்ட் ஆக்க வேண்டாம் என்று நினைத்து இன்னொருமுறை சகோதரியுடன் சென்றிருந்தேன். சரி இனி க்விக்கா விமர்சனத்திற்கு
* முதலில் சரண்யாவிற்கு நான்கு குழந்தைகள் - இரண்டு குழந்தைகளே அதிகம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான்கு குழந்தைகள் எல்லாம் ரொம்ப அதிகம். ராஜ்கிரண் ரொம்பவும் கெட்ட அப்பா.
* பிள்ளையார் இருக்கும் கோணிப்பையை நடுவில் வைத்து அரை சுத்து சுத்தினால்; அஜித்குமார் கேட் இருக்கும் பக்கம் போய்விடுவார் என்ற காமென் நாலேட்ஜ் கூட இல்லாத பெண்ணாக த்ரிஷாவின் அறிமுகம் கடுப்பேற்றுகிறது.
* வழமையான எல்லா படங்களையும் போல த்ரிஷாவும் படிப்பை நம்பாமல் பிள்ளையாரை நம்பும் பேதையாய். மூட நம்பிக்கைகள் இருக்கலாங்க அதுக்காக இப்படியா பிள்ளையாரை பார்க்காமப் போனா பெயிலாய்டுவேன்னு புலம்புறாங்க.
* த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ் இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் சிலையிருக்கிறது. இதனாலெல்லாம் என்ன சொல்லவருகிறார் இயக்குநர் பெண்கள் படித்து பாஸாவதில்லை; பிள்ளையாரை காக்கா பிடித்து பாஸாகிறார்கள் என்றா? வன்மையாகக் கண்டிக்கிறேன்.
* த்ரிஷாவின்அஜித்தின் தங்கை(அதுதான் அந்த ஜொள்ளு பத்தி எழுதினேனே அந்த பிகர் சாரி பொண்ணு) தான் வாங்கும் அப்ளிகேஷன் பாரம் எண்ணைக் கூட்டினால் நான்கு வருவதாகவும் மூன்றுதான் தன் அதிர்ஷ்ட எண் என்றும் கூறி இன்னொரு ஃபார்ம் வாங்கணும் என்று சொல்வதை வைத்து என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் பெண்கள் மூளைக்குள் இருக்கும் நியூரான்களை விடவும் நியூமராலஜியை(நேமாலஜி, நம்பராலஜி - வாட் எவர்) நம்புவதாகவா?
* த்ரிஷா அஜித்துடன் மொட்டை மாடி டாங்கில் உட்கார்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தைப் பற்றி புரளி பேசுகிறார். யோவ் என்னத்தான்யா சொல்றாரு உங்க இயக்குநர் பொண்ணுங்க மட்டும் தான் புரளி பேசுவாங்கன்னா; அதுவும் எவ்வளவு பெரிய சீனை வேஸ்ட் செய்திருக்கிறார் இதற்காக.
* விவேக்கின் மனைவி கதாப்பாத்திரம் தான் ஆரம்பத்தில் இருந்தே பெண்ணியத்திற்கு பேசுவதாய் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டு வந்தால் அதிலும் விழுந்தது இடி; விவேக் சும்மா பில்டப் கொடுக்கவே தன் புருஷனை பெரிய ரௌடி என்று நினைத்துக் கொள்வதை பார்க்கச் சகிக்கவில்லை.
* த்ரிஷாவின் அம்மா தனக்கு மருமகனாய் வரப்போகிறவனைப் பற்றி தொலைபேசியில் கேட்டே முடிவெடுப்பதாயும்; அவன் எவ்வளவு நல்லவன் கெட்டவன் என்று தீர்மானிக்காமலே(ஏனென்றால் அஜித் நல்லவரல்லவா :() தன் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கணவனை வற்புறுத்துகிறார். ஏன் பெண்களுக்கு யோசிக்கவே தெரியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டீர்களா?
--------------------
இன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன்; ச்ச பாலாய்ப்போன த்ரிஷா மாமியை சைட் அடிக்கவே நேரம் போதவில்லையாதலால் என்ன செய்ய நினைவில் வந்ததை எழுதியிருக்கிறேன்.
வர்ட்டா...
Monday, July 23, 2007 | Labels: ஜல்லி | 7 Comments
எக்ஸ்ட்ரா ஜொள்ளு
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளில் உருகும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
நான் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ ஒரு நாள் இறந்திருப்பேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனைக் கண்கள் எனக்கில்லையே
Friday, July 20, 2007 | Labels: Jessica Biel | 3 Comments
Weekend ஜொள்ளு
போன வாரமே போட வேண்டியது. வீக் எண்ட் ரொம்பவும் பிஸியாயிருந்ததால் எடுத்து வைத்திருந்த படங்களை அப்லோட் பண்ணி போட முடியவில்லை. சரா போட்டாச்சு ;-)
Friday, July 20, 2007 | Labels: Jessica Alba, Kirsten Dunst, Paris Hilton, Weekend ஜொள்ளு | 5 Comments
சுஜாதா குப்பைகள் ஜல்லி இன்னபிற
தெரியாத்தனமாக என் இ-மெயில் முகவரியை இந்தப் பகுதியில் கொடுத்ததில், எனக்கு அனுப்பப்படும் குப்பைகள் ஏராளமாகிவிட்டன. உலகில் உள்ள உதவாத விஷயங்கள் அத்தனையையும் இணைத்து அனுப்பி, ‘‘இதைக் ‘கற்றதும்... பெற்றதும்...’ பகுதியில், என் பெயர் போட்டு எழுதவும். இல்லையேல் திட்டுவேன்’’ என்று ஆணையிடுகிறார்கள். இதைப் பற்றி என் மகனிடம் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்டர்நெட்டில் நல்ல விஷயங்களை நாம்தான் நாடிப்போக வேண்டும். மற்றவற்றைப் படிக்காமல் ஒதுக்கிவிட வேண்டும். தெரிந்தவர்களிடமிருந்து இ-மெயில் வந்தால் மட்டும் திறக்க வேண்டும். இல்லையேல், சளைக்காமல் பயன்படுத்த இருக்கவே இருக்கின்றன ‘டெலிட்’, ‘ஜங்க்’ ஆணைகள்!’’ என்றவன், ‘‘இதை மட்டும் பார்!’’ என்று மூன்று அருமையான வலைமனைகளின் முகவரி தந்தான்.
அவற்றைப் பார்த்து யான் பெற்ற பரவசம் க-பெ வாசகர்களுக்கும் கிடைக்க வேண் டும் என்கிற உண்மையான நோக்கத்தில், அந்த மூன்று முகவரிகளையும் தருகிறேன். www.ted.com இதில் உலகின் சிறந்த அறிவுஜீவிகளின் சுருக்கமான, கருத்தாழமான ஆடியோ, வீடியோ சொற் பொழிவுகள் உள்ளன. கலை, இலக்கியம், இசை, அறிவியல், கடவுள் போன்ற பல விஷயங்களைப் பற்றிய உண்மையான அறிவுஜீவிகளின் அவைக்கு அளிக்கப்பட்ட கலகலப்பான சொற் பொழிவுகள்.
அவற்றில் நான் சமீபத்தில் அனுபவித்தவை இவை... ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘நான் ஒரு நாத்திகன்’ சொற்பொழிவு, லின் என்னும் சீன அமெரிக்கச் சிறுமியின் அட்டகாச மான பியானோ வாசிப்பு, ‘உலகெங்கிலும் ஏழ்மையின் வடிவங்கள்’ பற்றி ஆல்சன் என்ற ஐரோப்பிய பொதுநல ஆரோக்கிய நிபுணர் தந்த புள்ளிவிவரங்கள், ஐரோப்பா உபகிரகத்தில் மனிதன் இறங்கச் செய்து கொண்டு இருக்கும் ஏற்பாடுகள் பற்றி ஒரு வீடியோ (‘ஐஸ் பாளங்களை உருக்க சிறிய நியூக்ளியர் கப்பலை முதலில் அனுப்புவோம்!’)... இப்படி பிரமிப்பூட்டும் விஷய வீச்சு! அதே போல் www.edge.comwww.edge.org என்பதில் அறிவியலும் மனித மனமும் பற்றிய சிறந்த கட்டுரைகள் உள்ளன. www.aldaily.com என்பதில் கலை, இலக்கியம் பற்றிய செய்திகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறந்த கட்டுரையாளர்களின் பத்திகள் அத்தனையும் கிடைக்கின்றன.
மூன்றுமே எனக்கு மூன்று வருஷத்துக்குப் போதும். எனவே, கேட்காமல் எதையும் தயைகூர்ந்து அனுப்பாதீர்கள். மீறி அனுப்ப ஆர்வம் பீறிட்டால், இந்த மூன்று வலைமனைகளையும் ஒரு ‘கிளான்ஸ்’ பார்த்துவிடுங்கள். அவை களை மிஞ்ச முடியுமா, பாருங்கள்!
TED போல, தமிழில் சிறந்த சொற்பொழிவுகளை ஏதாவது ஒரு வலைமனையில் யாராவது வீடியோ எடுத்து வைக்க முன்வந்தால் நல்லது. சரியாக இருபது நிமிஷத்துக்கு மேல் போகக் கூடாது. ஒவ்வொரு துறையிலும் சிறந்த சொற்பொழிவாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆடியன்ஸ் முன்னிலையில் சிரிப்பும் கரகோஷமும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். அருகே பேச்சாளரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு தர வேண்டும்.
எனக்கு உடனே தோன்றும் முதல் பட்டியல் இது. தென்கச்சி சுவாமிநாதன் (தகவல் தருவது எப்படி?), பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் (பட்டிமண்டப அனுபவங்கள்), பேராசிரியர் மா.நன்னன் (பழமொழிகள் தேவையா?), சாலமன் பாப்பையா (சங்க இலக்கியம் & ஓர் அறிமுகம்), வேளுக்குடி கிருஷ்ணன் (பிரம்ம சூத்ரம் புரியுமா?), சுனந்தா பார்த்தசாரதி (18&ம் அத்தியாயம்), பால் தினகரன் (இயேசுநாதர் இன்று), சஞ்சய் சுப்ரமண்யன் (கர்னாடக இசையும் மேற்கத்திய இசையும்).
ஒவ்வொருவருக்கும் இப்படித் தலைப்பு தருவதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன். அந்த வரிசையில் என்னைக் கேட்டால், நான் கொடுக்க விரும்புவது... ‘பிரபஞ்சத்தின் முடிவும் ஆரம்பமும்!’
நன்றி - கற்றதும் பெற்றதும் சுஜாதா ஆனந்த விகடன்
------------------------------------
இதில் ஜல்லியடிக்க உகந்தவை
அதெல்லாம் சரி அவரது மகன் சொல்வதற்கு முன்னர் மெயில் பாக்ஸில் இருக்கும் டெலிட் பட்டனும் ஜங்க் பட்டனும் தெரியாத முட்டாளா சுஜாதா.
தன்னுடைய மகனையும் தமிழ் இலக்கிய வட்டத்தில் இறக்கிவிடும் முயற்சியாக இதைப் பார்க்கிறேன்.
Friday, July 20, 2007 | Labels: காப்பி-பேஸ்ட் | 10 Comments
பொன்ஸ் பூர்ணாவிற்கு கண்டனங்கள்
இதை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இப்படியெல்லாமா செய்வது. என்னவெல்லாம் காரணம் சொன்னாலும் இதை ஒத்துக்கவேமுடியாது.
பூனைக்குத்தான் புலியைப் போல சூடுபோட்டுக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எல்லாம் ஒரே பேமிலி. யானையெல்லாம் வேற ஃபேமிலி புரிஞ்சிக்கங்க.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தப் பதிவிற்கு ISO : 9002 மொக்கை பதிவென்று அங்கீகாரம் கிடைக்குமா?
Tuesday, July 17, 2007 | Labels: ஜல்லி | 9 Comments
கவித கவித
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
உந்தன் அழகைக் கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன்மேனி
மீட்டட்டும் என்மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல்மட்டும் இங்கே கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர்கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகிற்கில்லை ஈடு
உயிரே உனையே நினைத்து
விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண்விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆகாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உன்னை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன்புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன்னை நானும் சேரும் நாள்தான்.
காதலர் தினம் வரிகள் - வாலி எழுதியவை.
என் வாழ்க்கையில் கணக்குகள் போடாமல் காதலித்த பருவத்தில் வந்த படம் மற்றும் பாடல்கள். இன்றைக்கும் கேட்டால் காற்றில் மிதப்பதைப் போன்ற ஒரு உணர்வு வரும். ஒருவேளை காதலிப்பதே காற்றில் மிதப்பது மாதிரியானதுதானோ.
இருந்துவிட்டு போகட்டும், வரப்போகும் மனைவியை காதலித்துக் கொள்ளலாம். ;-)
PS: இது Weekend ஜொள்ளு கிடையாது. அது தனிப்பதிவு தனியா வருது நேயர் விருப்பமா.
Friday, July 13, 2007 | Labels: Adrina Lima, ஜல்லி | 0 Comments