கடந்த இரண்டு நாட்களாகவே ஏகப்பட்ட மெய்ல் மற்றும் பின்னூட்டங்கள் பாரீஸ் ரிலீஸ் ஆனதைப் பற்றி எழுதவேயில்லையே என்று. இப்பொழுது அவரின் பேட்டி ஒன்றைப் போட்டு ரசிகர்களை மகிழ்விக்கிறேன்.
சரி சரி போட்டுடுறேன் - வீடியோ பதிவு
Thursday, June 28, 2007 | Labels: Paris Hilton, ஜல்லி | 0 Comments
Coooooooool - சிவாஜி பற்றியது அல்ல
வாசகர் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பதிவு. இனி இதுபோல் வேண்டுகோள்கள் ஏற்றுக் கொள்ளப்படும் ;)
Wednesday, June 27, 2007 | Labels: ஜல்லி | 4 Comments
ஏமாற்றும் பெண்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கவேண்டும் - பிரசாந்த் பேட்டி
இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக... என்று டி.வி.சேனல்களில் போடப்படும் புதுப்படங்களுக்கு விளம்பரம் கொடுப்பார்கள். அதுபோல நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மனைவியிடம் இரண்டு கணவர்கள் ஒரே நேரத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார்கள். நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியிடம் அவருடைய முதல் கணவர் வேணுபிரசாத்தும் இரண்டாவது கணவரான நடிகர் பிரசாந்தும் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் பிரசாந்த் மீது பல்வேறு புகார்களைக் கூறிவந்த கிரகலட்சுமி, முதல் திருமணம் செய்து கொண்ட விவகாரம் வெளியானதிலிருந்து கப்சிப் ஆகிவிட்டார். பிரசாந்தோ, இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், நாம் பிரசாந்தை சந்தித்துப் பேசினோம்.
மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று வந்திருக்கிறீர்களே?
‘‘எனக்குக் கல்யாணம் நடக்கும் வரை திருமணத்துக்குப்பின் இத்தனை சிக்கல்களும் சங்கடங்களும் இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கிரகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு அவர் என்மீது சொன்ன பொய்யான குற்றச்சாட்டுகளையும் அதன்மூலம் ஏற்பட்ட அசிங்கங்களையும் தாங்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். அது மட்டுமின்றி வரதட்சனைக் கொடுமை என்ற சட்டத்தைப் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் தவறாகவும் தங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னால் அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இதுபோல் மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் சுமார் மூவாயிரம் பேர் சேர்ந்து ஒரு சங்கத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தார்கள். நானும் அதில் கலந்துகொண்டு வரதட்சணைக்கொடுமை சட்டத்தால் நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன் என்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.’’
உங்களை மனைவி கிரகலட்சுமியிடம் அவரது முதல் கணவர் வேணு பிரசாத்தும், நீங்களும் ஒரே நேரத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறீர்களே?
‘‘இது மிகவும் அசிங்கமான சூழ்நிலை. இந்த அசிங்கம் என் வாழ்க்கையில் நடந்திருப்பதை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது.’’
கிரகலட்சுமியின் முதல் கணவர் வேணுபிரசாத் பற்றி?
‘‘அவரைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கல்யாணமாகி சில மாதங்கள் மட்டுமே கிரகலட்சுமியுடன் குடும்பம் நடத்திய நான், அவரால்பட்ட கஷ்டங்களை நினைக்கும்போது... கிரகலட்சுமியுடன் மூன்று ஆண்டுகள் தொடர்பில் இருந்ததாக வேணுபிரசாத் கூறியுள்ளார். அந்த நாட்களில் வேணுபிரசாத் எவ்வளவு அவஸ்தைப்பட்டார் என்று அவருக்குத்தான் தெரியும்.’’
கிரகலட்சுமியும் தானும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதில்லை என்று வேணுபிரசாத் கூறியுள்ளாரே?
‘‘ஆரம்பத்தில் கிரகலட்சுமி தனக்கு வேணுபிரசாத்துடன் திருமணமே நடக்கவில்லை. இந்த ஆவணங்கள் எல்லாமே பொய் என்று கூறினார். அதன் பிறகு நீதிமன்றத்துக்குப் போய் முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார். இப்போது அவருடைய முதல் கணவர் ‘கல்யாணம் நடந்தது உண்மைதான். ஆனால் தாம்பத்திய உறவுதான் இல்லை’ என்று கூறியிருக்கிறார். இந்தப் பொய்களுக்கும் அசிங்கத்திற்கும் நான் விளக்கம் கூற விரும்பவில்லை’’.
வேணுபிரசாத் உங்களை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று கூறியிருக்கிறாரே?
‘‘அந்த அருவருப்பான சூழ்நிலைக்கு ஆட்பட நான் தயாராக இல்லை. இரண்டு பேர் காதலிக்கும் போது தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று கூறினால் கூடப் பரவாயில்லை. திருமணமாகி ஒரு வருடம் தொடர்பில் இருந்ததாக அவரே கூறிவிட்டு, தங்களுக்குள் தாம்பத்ய உறவு இல்லை என்று கூறிவருது அபத்தமானது. நானும் கிரகலட்சுமியும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். இனி அதற்கான வழியே இல்லை. கிரகலட்சுமி Êஏற்கெனவே திருமணமானவர் என்ற ஆதாரங்களைக் கொடுத்துத்தான் நான் விவாகரத்தே கேட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி வேணுபிரசாத் ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டருக்குக் கொடுத்திருந்த பேட்டியில், எனக்கும் கிரகலட்சுமிக்கும் ஆரம்பத்தில் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை போன போது, இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்து நானும் கிரகலட்சுமியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகக் கூறியிருந்தார். பிரச்னை பெரிதாகி தனக்கும், கிரகலட்சுமிக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று தான் பயந்ததாகவும் கூறியிருந்தார். இந்தக் குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், நான்தான் ஏதோ பெரிய தவறைச் செய்துவிட்டு அதை மறைத்து கிரகலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதைப்போல் என்னை அசிங்கப்படுத்திச் சீரழிக்க நினைத்தார் கிரகலட்சுமி. ஆனால் நான் வணங்கும் தெய்வம் என்னைக் காப்பாற்றி விட்டது.’’
கிரகலட்சுமி விவகாரத்தில் நீங்கள் மிரட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
‘‘திருமணமானதிலிருந்தே நல்லபடியாகக் குடும்பம் நடத்த வேண்டும்; சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே கிரகலட்சுமிக்கு வந்ததில்லை. தன் இஷ்டத்துக்கு ஊர் சுற்றவேண்டும். நள்ளிரவுவரை கிளப்புகளில் கூத்தடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். அத்துடன் எந்த நேரமும் என் பணத்தின்மீதே குறியாக இருந்தார். அவருடைய குடும்பத்துக்குப் பல்வேறு மட்டத்தில் தொடர்பிருப்பதால் அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி என்னிடமிருந்து கோடிகளில் பணம் பறித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கணக்கு. அதற்காக மறைமுகமாக மிரட்டிப் பார்க்கிறார்கள். நான் நீதியின் மேல் நம்பிக்கையுள்ளவன். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். சட்டப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்குவேன்!’’
கிரகலட்சுமியிடம் விவாகரத்து வாங்கிய பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா?
‘‘கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு முதலில் இந்தத் தலைவலிகளிலிருந்து வெளியில் வர வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எண்ணம். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் முழு கவனம் செலுத்துவேன். மறுபடியும் திருமணம் பற்றியெல்லாம் நினைக்கும் நிலையில் நான் இப்போது இல்லை!’’
‘‘ஏமாற்றும் பெண்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கவேண்டும்!’’
பிரசாந்த் _ கிரகலட்சுமி விவகார வழக்குப் பற்றி பிரசாந்தின் வழக்கறிஞர் ஆனந்தனிடம் கேட்டோம். ‘‘கிரகலட்சுமியிடமிருந்து பிரசாந்த் விவாகரத்து வாங்க, கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமானவர் என்ற ஆதாரங்களே போதுமானது. அதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் எங்களின் நோக்கம் அதுமட்டுமல்ல. ஏற்கெனவே திருமணமானதை மறைத்து ஒரு பிரபல நடிகரின் வாழ்க்கையையே சீரழித்துள்ளார் கிரகலட்சுமி. இது கிரிமினல் குற்றம். இதனடிப்படையில் கிரகலட்சுமி மீது கிரிமினல் வழக்குப் போட்டு அவருக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அதுதான் கிரகலட்சுமியால் பிரசாந்த் பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரம். கணவர்களை ஏமாற்றும் மற்ற பெண்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே, கிரகலட்சுமிக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்வரை நாங்கள் ஓயப் போவதில்லை!’’ என்றார்.
நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்
சாரி - அதைச் சொன்னது பிரசாந்தின் வக்கீல் Grrr. கொஞ்சம் குழப்பமாய்டுச்சு.
Wednesday, June 27, 2007 | Labels: காப்பி-பேஸ்ட், செய்திகள் | 2 Comments
ரஜினிக்கு எதிராக சிரஞ்சீவி
‘ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கும் பெரிய வீட்டு நிச்சயதார்த்தம் ஒன்று, ‘ரஜினி அரசியலுக்கு வருவார்’ என்பதை நிச்சயம் செய்திருக்கிறது’ என்பது தான் லேட்டஸ்ட் பரபரப்பு! கடந்த 24-&ம் தேதி ஹைதராபாத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மகன் யோகேஷ§க்கும் அவரது மைத்துனரும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணாவின் மூத்த மகள் பிரம் மணிக்கும் நிச்சய தார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகப் பரபரப்புக் கிளம்பி இருக்கிறது.
சந்திரபாபு நாயுடு இல்லத்து வைபவத்தை மையமாக வைத்து இப்படி செய்தி கிளம்பி இருப்பதால், இதுபற்றி ‘தெலுகு தேசம்’ கட்சியின் சீனியர் தலைவர் ஒருவரிடம் கேட்டோம்.
‘‘ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்தது. என்.டி.ஆர். காலத்திலிருந்தே சந்திரபாபுவுக்கும், ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டென்றாலும், சமீபத்தில் அது வலுப்பெற்றிருக்கிறது. நாயுடுவிடம் ரஜினி நிறைய அரசியல் பேசுகிறார். அந்த அரசியல் சந்திப்புகள் சென்னையிலும் ஹைதராபாத்திலும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன’’ என்றவர், நாயுடு வீட்டு நிச்சய தார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்.
ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘‘ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு வர வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற கோஷம் ஆந்திரா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சிரஞ்சீவியின் சாதிக்காரர்கள் மாவட்டம்தோறும் தங்கள் சாதி சங்கக் கூட்டத்தைக் கூட்டி, ‘சிரஞ்சீவி அரசியலுக்கு வராதபட்சத்தில் கட்சியை நாங்களே தொடங்குவோம். அதன் தலைமைப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2009&ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தான்தான் அடுத்த முதல்வர் என்று நினைத்திருக்கும் நாயுடுவுக்கு, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் தலைவலியைக் கொடுக்கும்.
சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால் அது நாயுடு கட்சியின் ஓட்டையும், காங்கிரஸ் ஓட்டையும் பிரிக்கும். அவரது அரசியல் பிரவேசம் காங்கிரஸ§க்கு சாதகமாக இருக்கும். கிட்டத்தட்ட உங்கள் மாநிலத்தில் விஜயகாந்த் இரண்டு கழகங்களின் ஓட்டுகளைப் பிரிப்பது போலத்தான் இது. சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால், அவரை எதிர்கொள்ள ஒரு சினிமா இமேஜ் நாயுடுவுக்கும் வேண்டும். இதற்காக இத்தனை காலமும் என்.டி.ஆர். குடும்பத்தை விட்டு ஒதுங்கியிருந்த நாயுடு, இப்போது என்.டி.ஆர். வாரிசுகள் அனைவரிடமும் தானே போய் சகஜமாகப் பழகி, அவர்களது அன்பைப் பெறும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
என்.டி.ஆரின் மூத்த மகன் ஹரி கிருஷ்ணா பிஸியான நடிகர். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் தெலுங்குத் திரை யுலகில் வலம் வருபவர். சிரஞ்சீவிக்கு இணையாகப் பேசப்படும் இன்னொரு ஆக்ஷன் ஸ்டார், என்.டி.ஆரின் கடைக்குட்டி பாலகிருஷ்ணா. இதில் ஹரிகிருஷ்ணாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுப்பதாகச் சொல்லி, அவரையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டார் நாயுடு. இப்போது தன் மகனுக்கு பாலகிருஷ்ணாவின் மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதன் மூலம் அவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
இதற்கெல்லாம் மேலாக ‘சிவாஜி’ மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்திருக்கும் ரஜினியையும் தன் நண்பராகக் காட்டிக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். தன் மகன் நிச்சயதார்த்தத்துக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய வி.ஐ.பி&க்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் நாயுடு. ரஜினி அந்த விழாவுக்கு வராவிட்டாலும், போனிலேயே மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். ஆரம்பத்தில் நெருங் கிய நண்பர்களாக இருந்து, பிறகு பரம எதிரிகளானவர்கள், நடிகர் மோகன்பாபுவும் சந்திரபாபு நாயுடுவும்.
இப்போது மோகன் பாபுவுடனும் நாயுடு நட்பு பாராட்டத் தொடங்கி விட் டார். இந்த நட்பு, ரஜினியின் ஆத்ம நண்பர் மோகன்பாபு என்பதால் அல்ல. சிரஞ்சீவியின் தீவிர எதிர்ப்பாளர் என்பதால்தான். ஆனால் மோகன்பாபு, நாயுடுவுக்காக ரஜினியிடம் அடிக்கடி பேசுகிறாராம். ‘மூன்றாவது அணிக்கே நீங்கள் போக லாமே’ என்றும் யோசனை சொல்கிறாராம். தனக்கு எதிராக சிரஞ்சீவி வருவார் என்பது உறுதியானால், ரஜினியைத் தனக்கு ஆதரவாகக் களம் இறக்குவார் நாயுடு. தற்போதைய சூழ்நிலையில், ‘சிரஞ்சீவி நிச்சயம் அரசியலுக்கு வந்தே தீருவார்’ என்று கணக்குப் போட்டு, அதனை எதிர்கொள்வதற்கு எல்லா வழிகளிலும் தன்னைத் தயார்படுத்திக் கொண் டிருக்கும் நாயுடு, இதற்காகவே நிச்சயம் ரஜினியை அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்ப்பார்’’ என்றார், அந்த காங்கிரஸ் தலைவர்.
இதற்கிடையில், நாயுடுவை முந்திக்கொண்டு முலாயம் சிங்குக்காக ரஜினியை மூன்றாம் அணிக்கு வரச்சொல்லி அமிதாப் பச்சன், ரஜினியுடன் பேசிக் கொண்டிருக்கிறாராம். இப்படி ரஜினிக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அரசியல் அழைப்புகள் வந்தவண்ணமிருக்க, ரஜினி என்ன நினைக்கிறார் என்பதை அறிய, அவரது நெருங்கிய வட்டாரங்களில் பேசினோம். ‘‘ரஜினி அரசியலுக்குக் கண்டிப்பாக வரமாட்டேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. இப்போது நாயுடுவுடன் அரசியல் பேசுகிறார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை, கலைஞரை எதிர்த்து அவர் நிச்சயம் அரசியல் செய்ய மாட்டார்’’ என்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் பதில் கேட்டு தெலுகு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் நடிகை ரோஜாவிடம் பேசினோம். ‘‘ரஜினி சாருடனும் சிரஞ்சீவி சாருடனும் நான் பல படங்களில் ஜோடியாக நடித் திருப்பதால், இருவரைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள், எல்லோரிடமும் நட்பாகப் பழக வேண்டும் என்ற சுபாவம் உள்ளவர்கள். தவிர, எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ரஜினி தனிப்பிரியம் வைத்திருக்கிறார். அவருக்காக எந்த உதவியையும் செய்ய, எப்போதும் தயாராகவே இருப்பார் ரஜினி.
ஆந்திராவில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அடுத்த முதல்வர், எங்கள் தலைவர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களது எதிரிகள் சிலர், சிரஞ்சீவி சார்ந்துள்ள சாதி சங்கங்களைத் தூண்டிவிட்டுப் பரபரப்பு கிளப்புகிறார்கள். இவற்றுக் கெல்லாம் சிரஞ்சீவி லேசில் அசைந்து கொடுக்கமாட்டார் என்பதுதான் எங்கள் கணிப்பு!’’ என்றவர்,
‘‘எங்கள் தலைவரின் மகன் யோகேஷ், இப்போது எம்.பி.ஏ. படித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் மகள் பிரம்மணி பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் என்பது முன்பே முடிவானதுதான். இதில் அரசியலைப் புகுத்துவது தவறு!’’ என்று முடித்தார் ரோஜா.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான தாசரி நாராயணராவ் மூன்று வருடங்களுக்கு முன்பே, ‘சிரஞ்சீவி நிச்சயம் கட்சி தொடங்குவார், ஆட்சியைப் பிடிப்பார்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிரஞ்சீவியின் சாதிக்காரரான தாசரி நாராயணராவைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் ஓரங்கட்ட, கொதித்தெழுந்தார் அவர். ‘ஆந்திர மக்களின் உரிமையையும், உணர்வையும் புரிந்துகொள்ளத் தவறியதால்தான் இங்கே ஆட்சி செய்துவந்த காங்கிரஸை ஓரங்கட்டி மண்ணின் மைந்தராக என்.டி.ஆர். உருவெடுத்தார்.
அவர் இருக்கும் வரையிலும், அவருக்குப் பின்னாலும் காங்கிரஸ் இங்கே தலைதூக்க முடியவில்லை. இப்போதும் அதே நிலை தொடர்கிறது. இப்போது என்.டி.ஆர். இல்லை. ஆனால், அவருக்கு நிகரான மகா சக்தி ஒன்று உள்ளது. அதுதான் சிரஞ்சீவி.
அவர் அரசியலுக்கு வரத் தயாராகவே இருக்கிறார். அவரோடு நாங்களும் பேசி வைத்திருக்கிறோம். அவர் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று முழங்கத் தொடங்கினார் தாசரி நாராயணராவ். இவரது இந்த அதிரடிக்குப் பிறகு, இவருக்கு காங்கிரஸில் முழு மரியாதை கிடைத்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து சிரஞ்சீவியுடன் அவர் தொடர்பில்தான் இருக்கிறார்.
ஒருவேளை, அரசியல் சூழ்நிலைகள் வலுக்கட்டாயமாக சிரஞ்சீவியை களத்துக்கு இழுத்து வரும்போது, அவருக்கு ஆதரவுக் கரம் கோக்க தயங்க மாட்டார் தாசரி நாராயணராவ் என்கிறார்கள், இருவரையும் நன்கு அறிந்த ஆந்திர அரசியல் தலைவர்கள். ‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மிக விரைவிலேயே ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி காலடி எடுத்துவைப்பார் என்பதால், அதை வைத்துத் தமிழகத்து சூப்பர் ஸ்டாரும் அரசியலில் களம் இறக்கி விடப்படுவார்’’ என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.
அரசியல் புயலும் இப்போது ஆந்திராவை மையம் கொண்டு இருக்கிறது!
நன்றி - ஜூனியர் விகடன்
Wednesday, June 27, 2007 | Labels: காப்பி-பேஸ்ட், செய்திகள் | 4 Comments
சந்திரமுகி பார்க்க ரஜினி அழைக்கவில்லை - கலைஞர்
சென்னை, ஜூன். 26: யாரும் குறை சொல்ல முடியாத நிறை மனிதர் ரஜினிகாந்த் என்று, சந்திரமுகி திரைப்பட வெற்றி விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804-வது நாள் வெற்றி விழா சாதனை திருவிழா என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-சிவாஜி புரடக்ஷன்ஸ் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி பேசியதாவது:&
‘சந்திரமுகி’படத்தை-அது 800 நாட்களுக்கு மேல் ஓடியுங்கூட, இன்று தான் பார்த்தேன். இந்த விழாவிற்காகவே பார்த்தேன். புத்தக வெளி யீட்டு விழாவிற்கு என்னை அழைக்கும்போதெல்லாம், அந்தப் புத்தகத்தை முதல் நாள் இரவு வரை படித்து விட்டு, விழாவிற்குச் சென்று நான் குறிப்பு எடுத்தவைகளை அந்த விழா நிகழ்ச்சியிலே பேசுவது எனக்கு வாடிக்கை.
பல பேர் விழாவிற்கு ஒத்துக் கொள்வார்கள், எந்த விழா என்பதை மேடைக்குச் சென்று தெரிந்து கொள்வார்கள். நான் அப்படியல்ல, ஒரு புத்தக வெளியீட்டு விழா என்றால், அந்தப் புத்தகத்தை தொடக்கம் முதல் முடிவு வரை படித்து விட்டு அதிலே உள்ள நல்ல கருத்துக்களையும், அல்லது என்னுடைய உள்ளத்திற்கு ஒவ்வாத கருத்துக்களையும் மேடைகளிலே எடுத்துச் சொல்வது என்னுடைய வாடிக்கை.
அப்படி ‘சந்திரமுகி’ படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பினேன் என்றாலும்கூட, இன்று தான் அதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்து, சந்திரமுகி படத்தை இதற்காகவே பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.
ஏன் 800 நாட்கள் ஓடியுங்கூட, இந்தப் படத்தைப் பார்க்க சூப்பர் ஸ்டார் உங்களை அழைக்கவில்லையா அல்லது இயக்குனர் வாசு தான் உங்களை அழைக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். எனக்குக் கூட இன்னும் அவர்கள் அழைக்கவில்லையே என்ற தாபம் இருந்தது. ஆனாலுங்கூட, ஒரு நம்பிக்கை, இவர்கள் என்னைஅழைக்காமலா போய் விடுவார்கள்? அழைத்துத் தானே தீரவேண்டும்,
இந்தப் படம் என்ன ஒரு நாள், இரண்டு நாள் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் ஓடக் கூடியதா? 100 நாட்களை, 200 நாட்களை, 300 நாட்களை எல்லாம் கடக்கும், அதற்காக ஒரு விழா எடுக்கிற நேரத்தில் நம்மை அழைக்காமலா விழா நடத்திடப் போகிறார்கள், ஆகவே அழைப்பார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு தான் இருந்தேன். என்னுடைய நம்பிக்கை என்றைக்கும் வீண் போனதில்லை. இப்போதும் வீண் போகாமல் உங்களையெல்லாம் சந்தித்து என்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிற வாய்ப்பு எனக்கும், உங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
804-வது நாள் விழா-இதற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று இயக்குநர் வாசுவும், தம்பி இளையதிலகம் பிரபுவும் மற்றும் ராம்குமாரும், ராம.நாராயணனும் என்னைச் சந்தித்து கேட்ட போது, நான் 804 லேயே என்னுடைய வயது 84 ம் இருக்கிறது, அதாவது எட்டு, நான்கு என்ற எண்கள் இருக்கிறது, ஆகவே நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.
இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தில் பல இளம் உள்ளங்களில், படமாகப் பொதிந்திருக்கின்ற யாரும் குறை சொல்ல முடியாத நிறை மனிதர், ரஜினிகாந்த்தைப்பற்றி தமிழகத்திலே மாத்திரமல்ல, அண்மையிலே கடந்த டிசம்பர் திங்கள் ஜப்பான் நாட்டிற்குச் சென்ற நம்முடைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூட அங்கேயுள்ள நாடாளுமன்றத்தில் பேசும்போது-ரஜினிகாந்த்தைப் பற்றி அந்தக் கூட்டத்திலே அவர் பேசி, எங்கள் நாட்டு பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் பெயர், ஜப்பான் நாட்டிலும் பரவியிருக்கின்றது, அவருடைய படம் இங்கே வெற்றிகரமாக ஓடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் நாட்டிலே சொல்லியிருக்கிறார் என்றால், எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் அது, என்னைப் போன்றவர்கள் அதைக் கேட்டு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்திருப்போம், மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சந்திரமுகி படத்தில் நடித்திருக்கின்றவர்கள் அத்தனை பேரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் படத்தின் மூலமாகப் பெரும் புகழ் எய்தியிருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கு மிக மிக ஆறுதல் அளிக்கக் கூடியதல்ல, மிக மிக இன்பம் அளிக்கக் கூடியது மாத்திர மல்ல, என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இதய நாளங்களைத் தட்டி உங்களுக்கு ஒரு பெரிய நடிகர் மாத்திரமல்ல, தமிழகத்திலே ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரும் நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்ற செய்தியை எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
நான் ரஜினியை இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக அறிவேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக, விளம்பரமாக தெரியக் கூடிய தொடர்பு அல்ல. எப்பொழுதாவது தான் மின்னல் கீற்று போல அந்தத் தொடர்பு ஒளி விடும். ஆனால் எங்களுடைய இதயங்கள் நிச்சயமாக ஒன்று பட்டிருக்கக் கூடிய இதயங்கள்.
அந்த இதய உணர்வோடு நான் சொல்கிறேன், அவருடைய வெற்றிக்கு காரணம் எது என்றெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அவருடைய நடிப்பா? நடிப்பு மாத்திரமல்ல. அவருடைய கலை ஆர்வமா? அந்த ஆர்வம் மாத்திரமல்ல. அவருடைய உழைப்பா? அந்த உழைப்பு மாத்திரமல்ல. அவருடைய ஆற்றலா? அந்த ஆற்றல் மாத்திரமல்ல. வேறு எது அவருடைய வெற்றிக்குக் காரணம்? அவர் திரையுலகத்திலே மாத்திரமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்தில் எல்லாம், என்னைப் போன்றவர்களின் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்-எவ்வளவு மகத்தான வெற்றிகள் வந்தாலும், மலை போல வெற்றிகள் குவிந்தாலும், கடல் ஆழத்திற்கு வெற்றிகள் வந்து சேர்ந்தாலும், அவர் அடக்கமானவர்.
அந்த வெற்றிகள் எல்லாம் தனக்கு கிடைத்தது, தன்னால் தான் கிடைத்தது என்று எண்ணக் கூடியவர் அல்ல. எவர் ஒருவர் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் தான் தான் என்று எண்ணிக்கொள்கிறாரோ அவர் வீழ்வது நிச்சயம். யார் ஒருவர் வெற்றிக்கு எல்லாம் காரணம் எல்லோரும் என்று கருதுகிறாரோ, அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர். அந்த இரண்டாவது இடத்திலே இருப்பவர் தான் நம்முடைய அன்பிற்குரிய ரஜினி காந்த். ஆகவே தான் அவர் வெற்றிக்கு மேல் வெற்றியை இன்று பெற்று வருகிறார். அந்த வெற்றிகளிலே ஒன்று தான் சந்திரமுகியினுடைய வெற்றி.
இந்த வெற்றிப் படத்தைத் தயாரித்தவர்கள் சிவாஜி புரொடக்ஷன்ஸ். சிவாஜிக்கும் எனக்கும் உள்ள நட்பும், அன்பும், பாசமும், நேசமும் எத்தகையது என்பதை அறிவீர்கள். அவர் சிலையை சென்னையிலே வைப்பதற்கு, முதல்-அமைச்சராக இருந்துங்கூட, நான் பட்ட பாடு எவ்வளவு என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல்-அமைச்சராக இருந்தாலும், நீ எண்ணியது நடக்க முடியாது என்று நடக்கக் கூடாதென்று சில பேர் தடுத்த நேரத்தில் சட்டம் குறுக்கிட்ட நேரத்தில், நீதிமன்றம் வரையிலே சென்றபோது-நான் சொன்னேன்-சிலையை வைத்தே தீருவேன், இல்லையேல் என்னுடைய பதவியைக் கூடத் தூக்கி எறிவேன் என்று சொல்லி விட்டுத் தான் அந்தச் சிலையை, யாருக்கும் வாய்க்காத இடமாக கடற்கரையோரத்தில் பெருந்தலைவர்களுடைய சிலைகள் எல்லாம் இருக்கின்ற அந்த வரிசையில், பெரும் புலவர்களுடைய சிலைகள் எல்லாம் இருக்கிகினற அந்த வரிசையில், பெரும் தியாகிகளுடைய சிலைகள் எல்லாம் இருக்கின்ற அந்த வரிசையில் என்னுடைய ஆருயிர் நண்பர் சிவாஜி கணேசனின் சிலையைவைத்து நான் பெருமையுற்றேன்.
அப்படிப்பட்ட சிவாஜியின் குடும்பத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு சாதாரணமானதல்ல. தம்பி பிரபு இங்கே சொன்னதைப் போல அவருடைய திருமணத்திலே நான் தான் மாப்பிள்ளை தோழன். இன்றுவரையிலே நான் சிவாஜிக்குத் தோழன், சிவாஜி எனக்குத்தோழர். அந்தக் குடும்பம், எங்கள் குடும்பம், அந்தக் குடும்பத்திலே இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள், வெற்றி பெற்றார்கள் எனும்போது நான் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மூன்று சிவாஜிகள் உண்டு. ஒரு சிவாஜி, மராட்டிய மாவீரன். இன்னொரு சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்போது இந்த சிவாஜி, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி. இந்த மூன்று சிவாஜிகளும், சரித்திரத்திலே இடம் பெற்றப் பெயர்களாக இப்போது ஆகியிருக்கின்றன.
அப்படிப்பட்ட சிவாஜியை பார்க்கின்ற, ரசிக்கின்ற, அது கண்டு இன்பம் துய்க்கின்ற, மகிழ்ச்சிகொள்கின்ற மக்கள் இப்போது தமிழகத்திலே ஏராளம் இருக்கிறார்கள். இப்போது வெளி வந்திருக்கின்ற இந்தப் புதிய படம் கூட, வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன்.
திரையுலகத்திற்கு, கலையுலகத்திற்கு சாபக்கேடாக இடையிலே வந்த சில குறுக்கீடுகள் இப்போது அகன்றிருக்கின்றன. திரையுலகத்திலே உள்ளவர்களின் கஷ்டங்களை நீக்க வேண்டும் என்று நானும் உங்களில் ஒருவனாக இருந்து வளர்ந்த காரணத்தால் என்னுடைய பொறுப்புக்களைப் பயன்படுத்தி, பதவியைப் பயன்படுத்தி என்னால் முடிந்த அளவிற்கு திரையுலகத்தின் தேவைகளை நிறைவு செய்து வருகின்றேன்.
இன்றைக்கு வரியில்லாத ஒரு நிலை-கேளிக்கை வரி கிடையாது என்ற ஒரு நிலை-இருக்கிறது என்றால் அது இந்தத் திரையுலகத்திலே வளர்ந்த நான்-திரையுலகத்திலே உள்ள உங்களால் வளர்க்கப்பட்ட நான்-உங்களுடைய ஆதரவைப்பெற்ற நான்-உங்களுக்காக, ஏன் நமக்காக செய்து கொண்ட ஒரு நல்ல காரியம்-இது போன்ற நல்ல காரியங்கள் மேலும் மேலும் நடைபெறக் கூடிய அளவிற்கு நான் திரையுலகத்தாரோடு தொடர்பு கொண்டிருக்கிறேன். திரையுலக நண்பர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறேன்.
தம்பி வாசு பேசும்போது, ஒவ்வொரு நாளும்-கலைஞரின் வீட்டு வழியாகத் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். ஆனால் நானும் அந்த வழியிலே அவரைப் பார்த்ததில்லை, அவரும் என்னை வழியிலே பார்த்ததில்லை. அப்படிப்பட்ட கோபாலபுரத்தில் அவரும் வாழ்கிறார், நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு ஆச்சரியத்திற்குரியதல்ல. எனக்கு கோபாலபுரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அடுத்த வீட்டிலே உள்ளவர்களுக்கு என் வீடு எது என்று தெரியும். ஆனால் எனக்கு யார் வீடு என்று தெரியாது. ஏனென்றால் 1956-ம் ஆண்டு முதல் அங்கே நான் குடி வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இதுவரையிலே நான் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றே எனக்குத்தெரியாது. அப்படி பழகியிருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அடக்கத்தோடு வாழ விரும்பினேன், விரும்பி அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றான் வள்ளுவன். அந்த அடக்கம் தான் நம்முடைய தம்பி ரஜினிகாந்த்தை இவ்வளவு பெரிய புகழ் ஏணியிலே ஏற்றி வைத்திருக்கிறது. ஆரம்பத்திலே சொன்னேன் இது, அதையே மீண்டும் வலியுறுத்தி அவர் வாழ்க வாழ்க, அவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுக என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
நன்றி விகடன் சினிமா.
Tuesday, June 26, 2007 | Labels: காப்பி-பேஸ்ட், செய்திகள் | 1 Comments
Sivaji film download - DVD quality
சீக்கிரம் சீக்கிரம், பேன்ட்வித் கொஞ்சமாயிருக்கு. பேன்ட்வித் தீந்து காரித் துப்புறதுக்குள்ள அள்ளிக்கோங்க. அப்புறமா அங்க நொட்டான் இங்க நொள்ளை அப்படின்னா எனக்கு கோபம் வந்திரும் சொல்லிட்டேன். ஒரு இருபது பேர் பண்ணலாம்னு நினைக்கிறேன்.
அப்பாடி இவ்வளவுதான் வரும்னு நினைக்கிறேன். இப்ப வரவர இதைப் பத்தி வர்ற மெய்ல்களும் கமெண்ட்களும் ஏகமாகிவிட்டன. நான் இப்ப லிங்கெல்லாம் ஒன்னும் கொடுக்குறதாயில்லை.
அப்ப எதுக்கு இந்தப் பதிவுன்னு கேக்குறீங்களா? சூடான பதிவுகள் பகுதியில் உங்க பக்கம் இல்லாமல் இருக்கிறதேயில்லையே அது எப்படின்னு நேத்தி ஒரு "மூத்த" பதிவர் கேட்டதுக்காக அவரிடம் சொன்ன ஐடியாதான் இது. ஆனா அவர் தன்மானம் இல்லாம இந்த மாதிரி பதிவெல்லாம் போடமுடியாதுன்னு சொன்னதால நாம ஒரு டிரை பண்ணுறேன். சூடான பதிவில் வந்துடுமா?
அப்படி வரவைக்கிறதுக்காக பதிவை சூடாக்குறேன் இப்படி.
பதிவை சூடாக்க உதவிய பெனோலொப் க்ரூஸ் அவர்களுக்கு நன்றிகள்.
Monday, June 25, 2007 | Labels: பில்டப்புகள் | 41 Comments
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஹில்டன் அம்மாவும்
பக்கத்தில் ஒரு சீரியஸ் பிரச்சனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. நான் முன்பே எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பற்றி எழுதிக் கிழித்தவன் ஆதலால், எனக்கு போட்டி வைக்கும் நோக்கில் இந்தத் தலைப்பு என் முன் வைக்கப்பட்டது.
"Existentialism is a philosophical movement which claims that individual human beings have full responsibility for creating the meanings of their own lives. என்பதைத்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் ஒருவார்த்தைக் குறிப்பாகச் சொல்கிறது விக்கிபீடியா." என்கிற முறையில் இப்பொழுது ஒருவர் தன்னுடைய "Meanings of lives" அடைய விடாமல் எப்படி இந்தச் சமுதாயத்தால் பாதிக்கப்படுகிறார் என்று பார்ப்போம்.
பக்கத்தில் Play boy புகழ் Hugh Hefner பேட்டியில் கேட்கப்பட்ட "பாரீஸ் ஹில்டன் ஜெயிலில் இருந்து விடுதலையானதும் Play Boy பத்திரிக்கைக்கு "Pose" கொடுக்க கேட்கப்படுவாறா?" என்ற கேள்விக்கு. அப்படிப்பட்ட Offer அவரிடம் ஏற்கனவெ கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவருடைய அம்மையார் கேத்தி ஹில்டன் அதை விரும்பாததால் தட்டிக் கழிக்கப் படுவதாக வருத்தத்துடன் தெரிவித்தார். அவர் சொல்வதைப் பார்த்தால் பாரீஸ் ஹில்டனுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தான் தெரிகிறது.
இதிலிருந்து நான் மேற்சொன்ன கருத்து உத்திரவாதப்படுத்தப்படுகிறது இல்லையா.
Jokes apart, பாரீஸ் ஹில்டன் நாளை ஜெயிலில் இருந்து விடுதலையாவார் என்று தெரிகிறது. மொத்த 45 நாட்களில் அவருடைய நன்னடத்தை காரணமாக பாதி தண்டனையை அனுபவித்ததும் விடுவிக்கப்படுவார் என்று "ஏஜென்ஸி" செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருக்காக டாலர்கள் காத்திருக்கின்றன என்பது உண்மை,
"Paris, 26, will earn a reported £150,000 for a magazine interview and a further £500,000 for her first TV interview revealing all about her time in prison."
இந்தம்மா ஜெயிலுக்குப் போய் வந்ததைக் கூட காசாக்கமுடிகிறது. என்னடாயிது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்திற்கு வந்த சோதனை என்று புலம்புவது கேட்கிறது. என்ன செய்வது.
Monday, June 25, 2007 | Labels: Paris Hilton, ஜல்லி | 0 Comments
பிரசாந்த்தை மிரட்டும் வி.ஐ.பி.க்கள்!
நடிகர் பிரசாந்த்தும் கிரஹலட்சுமியும் ஒருவர் மாறி ஒருவர் கோர்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்க... அதற்கேற்ப அவர்களுக்கு இடையி லான பிரச்னைகளும் புதுப்புது திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
‘கிரஹலட்சுமி நல்ல குடும்பத்துப் பெண், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கக் கூடியவர் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அவரோ என்னை மணப்பதற்கு முன்பு 1998 - ம் வருடமே வேணு பிரசாத் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, என்னைப் பற்றி தவறான விஷயங்களைச் சொல்லி என் வாழ்வையே நாசப்படுத்திவிட்டார். இனி கிரஹலட்சுமியுடன் இணைந்து வாழ்வதை கனவிலும் நினைக்கமுடியாது’ என தீர்மானமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரசாந்த்.
கிரஹலட்சுமியின் தரப்போ, ‘கிரஹலட்சுமியை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பிரசாந்த் சித்ரவதை செய்திருக்கிறார். அதுதான் உண்மை! ஆனால், இந்த உண்மையை திசைதிருப்ப வேண்டும் என்றுதான் பதிவுத் திருமணம் கதையை அவிழ்த்து விட்டிருக் கிறார். அதோடு ‘கிரஹலட்சுமி குடிகாரர்... பண்பாடு தெரியாதவர்’ என்றெல்லாம் சொல்லி வருகிறார். சட்டப் படி அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்வோம்...’ என்று கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் கிரஹலட்சுமியின் முதல் கணவர் நாரயணன் வேணு பிரசாத், கடந்த 19 - ம் தேதி சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அங்கு நடந்த போலீஸ் விசாரணையில்,
‘தனது தங்கையின் நண்பர்கள் மூலமாகத்தான் முதன்முதலில் கிரஹலட்சுமி எனக்கு அறிமுகமானார். அதுவே நாளடைவில் காதலாக மாறியது. அதைத் தொடர்ந்து, கடந்த 1998&ம் ஆண்டு பெற்றோர்களுக்குத் தெரியாமல் சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். காலம் எல்லாவற்றையும் குணப்படுத்தி விடும் என்று நம்பினோம். அதனால், திருமணம் முடித்தும் நாங்கள் தாம்பத்ய வாழ்க்கை நடத்தவில்லை. அதன்பிறகு கிரஹலட்சுமியின் பெற்றோர் சம்மதத்துடன் ஊரறிய திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்தேன். அது நடக்கவில்லை.
ஆகவே, நானும் கிரஹலட்சுமியும் பிரிவது என தீர்மானித்தோம். அதன்பிறகு, என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், ஏற்கெனவே செய்த பதிவுத் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற சட்டம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் இன்றைக்கு இத்தனை சிக்கல் ஏற்பட்டு விட்டது. கிரஹலட்சுமியை நான் ஒருபோதும் ஆசைக்குக்கூட தொட்டதில்லை. இப்போது அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து வேதனைப்படுகிறேன்...’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த முதல் திருமணம் குறித்து முழுமையாக விசாரித்த போலீஸார், திருமணம் நடந்தது உண்மை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு கிரஹலட்சுமி - நாரயணன் வேணுபிரசாத் திருமணம் தொடர்பான அத்தனை ஆவணங்களையும் பதிவுத் துறை அலுவலத்தில் இருந்து பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள்.
அந்த ஆவணங்களில் கிரஹலட்சுமி தன்னுடைய அடையாளத்துக்காக வழங்கிய பாஸ்போர்ட் நகல், பள்ளி சான்றிதழ்களும் அடக்கம்.
இத்தனைக்குப் பிறகும் கிரஹலட்சுமி, ‘நான் ஒருபோதும் நாரயணன் வேணு பிரசாத்தைப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரசாந்த் வெளியிட்டிருக்கும் பதிவுத் திருமண சான்றிதழ் உட்பட எல்லாமே போலியானவை’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதுதான், அவர் மீது போலீஸுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில், தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார் கிரஹலட்சுமி. அவரின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘விவகாரம் நீதிமன்றத்திலும், போலீஸ் விசாரணையிலும் இருப்பதால் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை’’ என்றார் ஒற்றை வரியில்.
பிரசாந்த், கிரஹலட்சுமி இருவருடைய புகார்களை விசாரித்துக் கொண்டிருக்கும் தி.நகர் காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரனிடம் பேசினோம்.
‘‘பிரசாந்த், 'என் மனைவிக்கு ஏற்கெனவே நாராயணன் வேணு பிரசாத்துடன் திருமணமாகிவிட்டது, என்னை ஏமாற்றிவிட்டார்கள்' என்றும், ‘எனக்குத் திருமணமானதாக பிரசாந்த் கொடுத்திருக்கும் ஆதாரங்கள் போலியானவை’ என கிரஹலட்சுமியும் புகார் கொடுத்திருக்கிறார்கள். பதிவுத் துறை அலுவலகத்திலிருந்து பெற்ற ஆவணங்களில் கிரஹலட்சுமி கையெழுத்திட்டிருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. அந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். கிரஹலட்சுமியிடமும் விசாரிக்கப் போகிறோம். அதன்பிறகே இந்த விவகாரத்தில் நடவடிக்கை என்ன என்பது முடிவாகும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கோர்ட் மூலம் தண்டனை வாங்கித் தருவோம்’’ என்றார்.
இப்படி விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கிரஹலட்சுமியை நன்கு அறிந்தவர்கள் வட்டாரத்தில் இருந்து வேறுசில செய்திகளும் இப்போது உலாவரத் தொடங்கியிருக்கின்றன.
‘‘கிரஹலட்சுமி ஆடம்பர மோகம் கொண்டவர். சென்னையில் பல கிளப்புகளில் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அங்கெல்லாம் அடிக்கடி சென்று அவர்கள் விருப்பப்படி பொழுதைப் போக்குவார்கள். கிண்டி ரேஸ் கிளப்புக்கும் அவர்கள் குடும்பம் வாடிக்கையாக செல்லும். கிரஹலட்சுமியின் இன்றைய நிலைமைக்கு முக்கியக் காரணம் அவரது தந்தைதான்.
கிரஹலட்சுமியின் காதல் விவகாரம் அவர்களது குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும். அப்போதே நாராயணன் வேணுபிரசாத்& கிரஹலட்சுமி திருமணத்தை அவர்கள் அங்கீகரித்திருந்தால், இந்த விவகாரங்கள் எதுவுமே வந்திருக்காது’’ என்கிறது அந்த நட்பு வட்டாரம்.
இதற்கிடையில், கிரஹலட்சுமி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்த சில புகைப்படங்கள் எப்படியோ வெளியே வந்திருக்கிறது. தற்போது அதனையும் கைப்பற்றியிருக்கும் போலீ ஸார், அந்தப் படங்களையும் இந்த வழக்குக்கு ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதே நேரம் அந்த படங்களை பத்திரிகை அலுவலகங்களுக்கும் மின் அஞ்ச லில் அனுப்பியிருக்கிறார்கள் சிலர். அப்படியரு படம் நமக்கும் வந்து சேர்ந்தது.
இந்த விவகாரம் குறித்தெல்லாம் பிரசாந்த்தின் வழக்கறிஞர் ஆனந்தனிடம் பேசியபோது, ‘‘கிரஹலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருக்கிறது என்ற உண்மையை ஆதாரத்துடன் வெளியே கொண்டுவந்து விட்டோம். இந்தத் திருமணத்தை அப்படியே மறைத்துவிட்டு, நடிகர் பிரசாந்த்திடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிக்கவே, கிரஹலட்சுமி குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இந்த முயற்சிகளுக்குப் பின்னால் அரசியல் ரீதியாகவும் பணரீதியாகவும் செல்வாக்குப் படைத்த பலர் இருக்கின்றனர். அவர்கள், ‘கிரஹலட்சுமி குடும்பத்தாரிடம் தேவையில்லாமல் மோதினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று பிரசாந்த்தை அச்சுறுத்துகின்றனர். அவர்கள் எல்லா மட்டங்களிலும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை தொடரு மானால் அவர்கள் யார் என்பதை வெளியிட்டு விடுவோம்’’ என்றார் எச்சரிக்கும் குரலில்.
நடிகர் பிரசாந்த்தை மையமாக வைத்து இந்த விவகாரம் தொடருவதால், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.
நன்றி - ஜூனியர் விகடன்
Monday, June 25, 2007 | Labels: காப்பி-பேஸ்ட், செய்திகள் | 0 Comments
அங்க நிற்கிறார் கலாம்
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசியல் புகுந்து விட நான் காரணமாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில், நேற்று அப்துல் கலாமை செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் கலாம் மனம் விட்டுப் பேசினார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
கலாமை மையமாக வைத்த பல அரசியல் விளையாட்டுக்கள் நடந்து விட்ட போதிலும் கூட, அதுகுறித்த தடுமாற்றும் ஏதும் இல்லாமல், வழக்கமான கலாமாக படு உற்சாகமாக பேசினார் அப்துல் கலாம்.
செய்தியாளர்களிடம் கலாம் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஷ்டிரபதி பவனை மக்களின் பவனாக மாற்ற நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம். எங்களின் உழைப்பால் இன்று ராஷ்டிரபதி பவன், மக்கள் பவனாக மாறியுள்ளது.
இது நாட்டுக்கே உதாரணமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இது சிதைக்கப்பட்டு விடக் கூடாது. அதனால்தான் ராஷ்டிரபதி பவனில் அரசியல் நுழைந்து விடக் கூடாது, அதற்கு நான் காரணமாக அமைந்து விடக் கூடாது, ராஷ்டிரபதி பவனின் மாண்பு கெட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. போதும், போதும் என்று கூறி விட்டேன்.
ஆண்டுதோறும் ராஷ்டிரபதி பவனுக்கு இன்று 5 முதல் 10 லட்சம் பேர் வரை வருகிறார்கள். அவர்களில் சாதாரணமானவர்களும் இருக்கிறார்கள், மிகப் பெரிய மனிதர்களும் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவராக அடுத்து வருகிறவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவரால்தான் இந்த மாளிகைக்குப் பெருமை சேர்க்க முடியும்.
அடுத்த குடியரசுத் தலைவராக யார் வந்தாலும், அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர் நிச்சயம் குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பெருமை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.
எனக்கு முன்பு இருந்த அனைத்து குடியரசுத் தலைவர்களையும் நான் பார்த்துள்ளேன். ஒருவர் ஆசிரியர் என்றால் இன்னொருவர் தத்துவஞானியாக இருந்தார். மற்றொருவர் சிறந்த அரசியல் தலைவராக இருந்தார். இன்னொருவரோ நீதித்துறையில் சிறந்தவர். இப்படி ஒவ்வொருவரும் ஒரு துறையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.
அதுபோலவே அடுத்து வரும் குடியரசுத் தலைவரும் திறமை மிக்கவராக இருப்பார் என்று நம்புகிறேன்.
இரண்டு பிரதமர்களிடம் பணியாற்றியுள்ளேன். ஒருவர் முடிவு எடுப்பதில் திறமையானவர், இன்னொருவர் நிபுணத்துவம் பெற்றவர். சில நேரங்களில் இவர் முடிவு எடுப்பதில் திறமையானவராக இருக்கிறார். அவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். இது அற்புதமானது.
நான் கையெழுத்திட்ட மசோதாக்களிலேயே மிகவும் கடினமானது, ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாதான். அதை நான் முதலில் திருப்பி அனுப்பினேன். அது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதேபோல பயோடீசல் தொடர்பான மசோதா.
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு விஞ்ஞானியாக அரசியல்வாதிகளுடன் பழகினேன். பின்னர் குடியரசுத் தலைவர் என்ற முறையில் பழகினேன். நது நாட்டில் இரண்டு வகையான அரசியல் உள்ளது. ஒன்று அரசியல் ரீதியிலான அரசியல், இன்னொன்று வளர்ச்சி ரீதியிலான அரசியல்.
அரசியல் ரீதியான அரசியல் 30 சதவீதமாகவும், வளர்ச்சி ரீதியிலான அரசியல் 70 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுப்பேன். எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வேன் என்றார் கலாம்.
Credits - Thatstamil.com
Monday, June 25, 2007 | Labels: காப்பி-பேஸ்ட், செய்திகள் | 2 Comments
Weekend ஜொள்ளு
போன வாரம் விட்டு போய்டுச்சு, அதனால இந்த வாரம் கொஞ்சம் அதிக படங்கள். எஞ்சாய் மாடி. வழக்கம் போல மறைத்திருக்கிறேன் ஏனென்றால் எனக்கென்னமோ PG மாதிரி தெரியலை, அதனால Adults Onlyன்னும் சொல்லமுடியாது. இது போன்ற விஷயங்கள் உங்களை பாதிக்காதுன்னா கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.
Anne Hathaway









Eva Mendes



Petra Nemcova



Friday, June 22, 2007 | Labels: ஜல்லி | 8 Comments
கோடம்பாக்கத்து பொம்மைக் கல்யாணங்கள்
'சிவாஜி' பரபரப்பையும் ஓரம்கட்டி, கடந்த பல நாட்களாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்காக இருக்கும் இரண்டு தம்பதிகள் ஸ்ரீகாந்த் - வந்தனா, பிரசாந்த் - கிரகலட்சுமி! இரண்டு தம்பதிகளின் மண வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் செய்தித்தாள்கள் தினம் தினம் கொட்டை எழுத்துக்களில் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.
ஸ்ரீகாந்த்துக்கும் வந்தனாவுக்கும் திருமணத் தேதி குறித்த நிலையில், வந்தனா குடும்பத்தின் மீது இருக்கும் வங்கி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரிப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் குடும்பம் கல்யாணத்தை நிறுத்தியது. அடுத்த அதிரடியாக வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து, ‘‘நான் இந்த வீட்டு மருமகள். எனக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிந்துவிட்டது’’ என்று சொல்லி அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். ‘‘கல்யாணம் நடந்தது உண்மைதான். ஆனால், குடும்பத்தின் மீதுள்ள சி.பி.ஐ. வழக்குகளை வந்தனா என்னி டம் மறைத்தது ஏன்? சட்டப்படி விவாகரத்து பெறவிருக்கிறேன்’’ என்று ஸ்ரீகாந்த் சொல்லியிருக்கிறார். ஏன் இத்தனை அவசரமாக, ரகசியமாக வந்தனாவைத் திருமணம் செய்துகொண்டார், மாதக்கணக்கில் அந்த உறவை ஏன் மறைத்து வைத்தார் என்பதெல்லாம் இன்றுவரை விடை கிடைக்காத மர்மங்கள்!
இன்னொரு பக்கம் நடிகர் பிரசாந்த் அவர் மனைவி மீது குடும்பநல கோர்ட்டில் தொடுத்த வழக்கு திடீரென பல திருப்பங்களைச் சந்தித்தது. தொடர்ந்து பணம் கேட்டுத் தன்னை பிரசாந்த் குடும்பத்தினர் துன்புறுத்து வதாகவும் கிரகலட்சுமி சொல்ல, கிரகலட்சுமியோடு தான் சேர்ந்து வாழவே விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு இருந்த பிரசாந்த், அதிரடியாக புது திருப்பத்துக்கு அடி போட்டார்!
Ô‘கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமான விவரங்களை மறைத்து என்னைத் திருமணம் செய்துகொண்டார்’Õ என்ற அவர், பதிவுத் திருமண சான்றிதழை ஆதாரமாகக் காட்ட, அதுவரை கிரகலட்சுமி பக்கம் வீசிய அனுதாப அலை திசை திரும்பியது. அவருடைய முதல் கணவர் என்று சொல்லப்படும் நாராயணன் வேணுபிரசாத் காவல் நிலையத்தில் ஆஜராகி பழங்கதைகளை எடுத்து வைக்க, விவகாரம் முன்னிலும் பரபரவென கொழுந்துவிட்டது.
ஊருக்கே உபதேசம் செய்யும் நடிகர்கள், பெண் பார்க்கும் விஷயத்தில் இவ்வளவு பெரிய கோட்டை விடுவது ஏன்? பல சினிமா தம்பதிகளின் திருமண பந்தம் விவாகரத்தில் முடியும் சோகம் தொடர்வது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடி கோடம்பாக்கத்தை வலம் வந்தோம்.
தமிழ் சினிமாக்களில் சாதனை படைத்து இப்போது பார்வையாளராக கோலிவுட்டை கவனித்துக் கொண்டு இருக்கும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘‘ஏற்கெனவே விவாகரத்தில் முடிந்த பல நட்சத்திரத் திருமணங்களை ஆராய்ந்தால், பணத்துக்காகவும், தன்னைச் சுற்றியிருக்கும் தவறான மனிதர்களை நம்பியும் தப்பான துணையைப் பலர் தேடிக்கொண்டது தெரியும். வெளியில் வரும் மோதல்கள் ஒன்றிரண்டுதான். உள்ளுக்குள் இன்னும் பல சினிமா குடும்பங்களில் சிக்கல் உச்சகட்டத்தில் இருக்கிறது’’ என்றவர், சினிமாவில் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் இயக்குநரின் பல நாள் வேதனைக் கதையையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...
"நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி ஆச்சர்யப்பட வைத்தவர் அந்த இயக்குநர். அவர் கலைத்துறைப் பெண்ணைத்தான் காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். எந்த உரசலோ, ஊடலோ இல்லாதவர்கள் என்பதுதான் அந்தத் தம்பதி பற்றி வெளியில் பரவியிருக்கும் செய்தி. ஆனால், தினம் தினம் அந்த இயக்குநர் தன் காதல் மனைவியிடம் படும் அவஸ்தைகள் எங்களைப் போன்றவர் களையே நோகடிக்கிறது. மதுபானம் உள்ளே போய்விட்டால் போதும், பக்கத்தில் இருக்கும் நபர்களை அடித்து துவம்சம் செய்வது, காது கூசும் கெட்ட வார்த்தைகளை உரக்கச் சொல்வது என்று ரகளையின் உச்சத்துக்கே போய்விடுவார் அந்தப் பெண்மணி. வீட்டில் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை இருந்தாலும், அவரது நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. வீட்டிலேயே நட்சத்திர ஓட்டல் பார் அளவுக்கு சகல அயிட்டங்களும் உள்ளன. இரவு முழுவதும் வீட்டை ரண களப்படுத்திவிட்டுப் பின்னிர வில்தான் தூங்கப் போவார் அந்த நடிகை. இதனாலேயே, பெரும்பாலான நாட்கள் வெளியில் எங்காவது தங்கிப் பொழுதைக் கழித்துவிட்டு, அதிகாலையில்தான் வீட்டுக்குப் போகிறார் அந்த இயக்குநர். இமேஜ் என்ற ஒற்றைக் கயிறுதான் இருவருக்குமான பந்தத்தை இன்று வரை நீட்டித்திருக்கிறது!’’ என்றார் அவர்.
தமிழ் சினிமாவில் ‘சி’ சென்டர் நாயகனாகக் கொடி நாட்டி, முதன் முதலாகக் கோடிகளைச் சம்பளமாகப் பெற்ற அந்த நடிகரின் சோகக் கதையைப் புட்டுப் புட்டு வைத்தார், கிராமத்து அழகைத் தனது யதார்த்த கேமரா மூலம் கண்முன் நிறுத்திப் பெயர் பெற்ற அந்த ஒளிப்பதிவாளர்.
‘‘எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார் அந்த நாயகன். சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவரை கோடம்பாக்கம் ஹீரோவாகக் கொண்டாடியது. ஹீரோவாக ஒரு படம் நடித்திருந்த நிலையில்தான் அந்த நடிகையின் அம்மா, இவரை வளைத்துப் போட்டார். உண்மையில் வடபழனி ஏரியாவில் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்ட குடும்பம் அது. தன்னைச் சார்ந்தவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நிஜமாகவே நினைப்பவர் அந்த ஹீரோ. அதைப் பயன்படுத்திக்கொண்ட நடிகையின் குடும்பம் அந்த ஹீரோவின் சொத்துக்களைப் பிடுங்கிக் கொண்டு, கிட்டத்தட்ட அவரைக் கைகழுவி விட்டது.
இப்போது அந்த நடிகை தனது குழந்தைகளுடன் வசதியாகவே இருக்க, பாவம்... ஹீரோதான் வாய்ப்புகள் எதுவும் இன்றி, வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். வாழ்க்கையில் யதார்த்தத்தைப் புரிந்துகொள் ளாத குற்றத்துக்காகத் திருமணத்தையும் தொலைத்து, எதிர்காலத்தையும் இழந்து தவிக் கிறார் அந்த ஹீரோ’’ என்று வருத்தப்பட்டார் அந்த ஒளிப்பதிவாளர்.
‘‘போன தலைமுறை நடிகர்களை விடுங்கள். துறுதுறுப்பான ஒரு நடிகரின் மணவாழ்க்கையிலும் தினம் தினம் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. எந்நேரத்திலும் அந்தப் புயலில் திருமண வாழ்க்கை சிதறக் கூடும்’’ என்று சொல்கிறது கோடம் பாக்கத்தில் ஒரு கோஷ்டி. அவர்களை அணுகிப் பேச்சுக் கொடுத்தால், பகீர் தகவல்களை அள்ளிக் கொட்டு கிறார்கள்.
‘‘அப்பா அம்மா பார்த்து வைத்த பெண்ணைத்தான் அந்த நடிகரும் கல்யாணம் கட்டிக்கிட்டார். பார்க்க, சாந்த சொரூபியா இருக்கிற அந்தப் பொண்ணுக்கு ஏற்கெனவே வேறு ஒருவருடன் பழக்கம் இருந்திருக்கிறது. இது தெரியவந்ததும், நடிகர் படு அப்செட்! அன்றிலிருந்து அடிக்கடி அந்த வீட்டுக்குள் மோதல் சத்தங்கள் எழுவதும், மனைவி கோபித்துக் கொண்டு வெளியே போவதும், பின் அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதும் தொடர்கிறது. அவ்வப்போது தன் மனவலிக்கு மருந்து தேட ஆரம்பித்துவிட்டார். அந்த நடிகர். அவர் அப்படியரு பிடியில் இருப்பது வெளியே யாருக்கும் துளிகூடத் தெரியாது. தொழில் விஷயத்தில் அவர் அத்தனை பர்ஃபெக்ட்!’’ என்கி றார்கள்.
"புகழ் இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியநிலை வருமபோது சில சினிமா பிரபலங்கள், தங்கள் ஆற்றாமையை வாழ்க்கைத் துணையிடம் காட்டுவதும் நடக்கிறது. கணவர் அல்லது மனைவியின் மன வெறுமையைப் புரிந்துகொண்டு, அதைத் திசை திருப்பி, வேறு லாபகரமான வியாபாரங்களில் அவரை ஈடுபடச் செய்தும், இல்வாழ்க்கையை கலகலப்பாக்கியும் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்பவர்களும் ஏராளமாக இருக்கத்தான் செய்கிறார் கள். அமைதியாக நல்ல வாழ்க்கை நடத்தும் உதாரணங்கள் வெளியே அதிகம் தெரிவதில்லை. சண்டையும் சச்சரவுகளும்தானே செய்திகள் ஆகின்றன?!" என்று வருந்துகிறார் பல நடிகர்களை வெற்றிகரமாக இயக்கிய இயக்குநர் ஒருவர்.
மொத்தத்தில்... ஒளியை உமிழும் பிரகாசமான விளக்குகளின் பின்னால் அடர்த்தியான இருள் இருப்பது போல, பல நட்சத்திரங்களின் வாழ்க்கையிலும் சோக இருள் கவிந்தே இருக்கிறது!
நன்றி - விகடன்
Friday, June 22, 2007 | Labels: காப்பி-பேஸ்ட் | 0 Comments
அட அட அட அசத்துது "ஸ்டைல்"
உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் வசூல் மழையாக உள்ளதாம். உலக அளவில் இந்திப் படங்களுக்குத்தான் பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்தக் கருத்தை சிவாஜி தகர்த்தெறிந்து விட்டது. சிவாஜி மூலம் தமிழ் சினிமாவுக்கே புதிய உலக மார்க்கெட் உருவாகியுள்ளது.
உலக அளவில் ஒரே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆன ஒரே பிராந்திய மொழிப் படம் சிவாஜிதான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள சிவாஜி, விரைவில் மலாய், சீன, ஜப்பானீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.
உலக அளவில் அய்ங்கரன் உள்ளிட்ட ஐந்து விநியோக நிறுவனங்கள் சிவாஜியை திரையிட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 340 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.
வெளிநாடுளில் இந்தியப் படம் ஒன்று இத்தனை பிரிண்டுகளுடன் திரையிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தமிழிலும் இதுவே முதல் முறை.
90களில் வெளியாகி இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்திற்குக் கூட வெளிநாடுகளில் 60 பிரிண்டுகள்தான் அனுப்பப்பட்டன. அந்த வகையில் சிவாஜி படைத்துள்ள சாதனை இமாலய சாதனையாகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி வெளியானபோது, வெளிநாடுகளில் 90 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. அப்போது அதுதான் பெரிய தமிழ்ப் பட சாதனையாக இருந்தது. இப்போது சிவாஜி வந்து அதை முறியடித்து விட்டது.
இனி உலக அளவில் சிவாஜி செய்து கொண்டுள்ள சாதனைகளைப் பார்ப்போம்.
இங்கிலாந்து: இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாப் 10 பட பட்டியலில் சிவாஜியை சேர்த்துள்ளனராம். படத்திற்கு இன்னும் ரேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் டாப் 10 பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம் பெற்றிருப்பதே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் (ஸ்காட்லாந்து உள்பட) மொத்தம் 15க்கும் மேற்பட்ட சென்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளாம். லண்டனில் மட்டும் 5 தியேட்டர்களில் சிவாஜி போடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த பின்னர் ஐந்து தியேட்டர்களிலும் வருகிற 28ம் தேதி வரைக்கும் சிவாஜியையே ஓட்ட முடிவெடுத்துள்ளனராம்.
ஸ்காட்லாந்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜிதானாம். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் படம் திரையிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அமெரிக்காவில் தமிழ் சிவாஜி 46 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் வழக்கமாக வார இறுதியில்தான் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும். ஆனால் சிவாஜி விஷயத்தில் இது தலைகீழாக மாறியுள்ளதாம்.
ரெகுலர் காட்சிகளாகவே சிவாஜி அங்கு ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தியேட்டர்களில் மேலும் சில நாட்கள் சிவாஜியை திரையிட தீர்மானித்துள்ளனராம்.
தலைநகர் வாஷிங்டனில், முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது (தெலுங்கிலும் இதுவே முதல் முறையாம்) என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.
பே ஏரியா பகுதியில், சிவாஜி 2 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதில் தமிழ் சிவாஜிக்கு மட்டும் 5000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளதாம்.
தமிழர்கள் மட்டுமல்லாமல், பிற மொழி பேசும் இந்தியர்களும், அமெரிக்க வெள்ளையர்களும் கூட சிவாஜியைப் பார்க்க முட்டி மோதிக் கொண்டுள்ளனராம்.
கொலம்பஸ் நகரில் முதல் நாள் முதல் காட்சியன்று உட்கார இடம் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் நின்று கொண்டே படம் பார்த்தார்களாம்.
அமெரிக்காவில் சிவாஜியைத் திரையிடும் விநியோக உரிமையைப் பெற்றுள்ள வாணி மோகன் கூறுகையில், படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். பல தியேட்டர்களில் பெரும் திரளான வெள்ளையர்களையும் காண முடிந்தது. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடிப் பாடி படத்தை ரசித்தனர்.
சிவாஜி படம் மூலம் எனக்கு 200 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, டிரெண்ட் செட்டரும் கூட என்றார்.
கனடாவில் டொரண்டோ நகரில் 6 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. வான்கூவர், ஓண்டாரியோ நகரங்களில் தலா 2 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.
எட்மாண்டன் உள்ளிட்ட நகரங்களில் கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் விசேஷ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இணைய தளத்தில், இந்த வாரத்தின் நம்பர் ஒன் படமாக சிவாஜியை சிறப்பித்துள்ளனராம். சிவாஜிக்கு 10க்கு 9.7 மார்க் கிடைத்துள்ளதாம்.
மலேசியா, சிங்கப்பூரில் சிவாஜி பெரும் சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். ஆனால் கூட்டம் பெரும் திரளாக மாறிப் போனதால் கூடுதலாக 20 தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். 60 தியேட்டர்களிலும் சிவாஜி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம்.
ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மூனிச் நகரில் நடந்த 25வது வருடாந்திர திரைப்பட பொருட்காட்சியில், 2 நாட்களுக்கு சிவாஜியை திரையிட்டுள்ளனர். அதிரடி பாட்டுக்கு பல ஜெர்மானியர்கள் ஆட்டம் போட்டு ரசித்துததான் இதில் ரொம்ப விசேஷமானது.
அயர்லாந்திலும் சிவாஜி புகுந்து விட்டது. அங்கு டப்ளின் நகரில் 2 தியேட்டர்களில் 6 காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜிதான் ஜெர்மனியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாம்.
ஐரோப்பிய நாடுகளில் ஸ்விட்சர்லாந்தில் (5 செண்டர்களில் 20 காட்சிகள்), பிரான்ஸில் (எஸ்பேஸ் சினிமா பாரீஸில் 4 காட்சிகள்), நார்வேயில் (ஓஸ்லோவில் ஒரு காட்சி), போலந்தில் (வார்சாவில் 2 காட்சிகள்), நெதர்லாந்தில் (8 செண்டர்கள்), டென்மார்க்கில் (10 செண்டர்கள்), இத்தாலியில், (இரு நகரங்களில்) என சிவாஜி கலக்கி வருகிறது.
தமிழர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 25 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 9 பிரிண்டுகளுடன் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கிலும் சிவாஜிக்கு அமோக வரவேற்பாம். துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், பஹ்ரைன் என பல நாடுகளில் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம். ஆகஸ்ட் வரை இங்கு சிவாஜியை ஓட்ட முடிவு செய்துள்ளனராம்.
இலங்கையில் 14 பிரிண்டுகளுடன் 9 மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே இங்கும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகி விட்டதாம்.
கை வலிக்க வலிக்க அடிச்சாலும் சிவாஜி கதை நீண்டு கொண்டே போகுதப்பா!
நன்றி - தட்ஸ்தமிழ்.
Thursday, June 21, 2007 | Labels: ஜல்லி | 12 Comments
Video Testing - Kovai Blog Camp
draft.blogger.com என்று புதிய சில ப்யூச்சர்களுடன் ப்ளாக்கர் கிடைக்கிறது. உபயோகித்துப் பார்க்க நினைக்கிறேன். எப்படி வருகிறது என்று தெரியவில்லை, வீடியோ பாமரன் ஆறுமுகம் அவர்களை பேட்டியது(பேட்டி எடுத்தது.)
Thursday, June 21, 2007 | Labels: போட்டுத்தாக்கு | 1 Comments
ஹாலிவுட்டில் ஒரு MCP
வேறுயாருமில்லை ஜென்டில்மேன் எல்லாம் நம்ம டாம் க்ரூஸ் தான், அவரை விட கேத்தி ஹோம்ஸ் உயரமானவர் என்பதால் இருவரும் ஒன்றாய் நடந்து வரும் சந்தர்ப்பங்களை டாம் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார் என்பது. அவர்களை இரண்டு வருடங்களாய் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.
சாதாரணமாகவே கேத்தி ஹோம்ஸ் உயரமான ஹை ஹீல்ஸ் போடும் பழக்கம் உடையவர் என்பது, அவரை டாம் க்ரூஸின் மனைவி என்பதை விடவும் ஒரு நடிகையாக அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்பொழுது அப்படிப்பட்ட கேத்தி ஹோம்ஸை சாதாரணமான ஹீல்(அப்படி சொல்லமுடியாதுன்னாலும்) போட்டு அழைத்து வரும் டாம் க்ரூஸை என்னவென்று சொல்வது.
அப்படி ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் சமயத்திலும் கால்களைக் குறுக்கி டாம் உயரமானவர் என்று நிரூபிக்க நிறைய பிரஸ்தாபப்படுவார். Okay jokes apart கேத்தி ஹோம்ஸ் மீண்டும் முழுகாமல் இருக்கிறார் என்று ஏஜென்ஸி செய்திகள் சொல்கின்றன.
போன தடவையே சூரி க்ரூஸை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் குழந்தை அட்டகாசமாக வளர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் டாம், கேத்தி ஹோம்ஸ் தவிர இருப்பது நம்ம "ரோபாட்" விக்டோரியா பெக்கம் தான். டாடி என்று அணிந்திருப்பது ப்ரூக்ளின் என்று நினைக்கிறேன்.
Thursday, June 21, 2007 | Labels: Katie Homes, Tom Cruise, ஜல்லி | 0 Comments